வெள்ளிக்கிழமை உங்கள் வீடுகளில் இது நடந்தால்..கவனமாக இருங்கள்
பொதுவாக, இந்த பிரபஞ்சம் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒரு சிறிய அறிகுறியின் வழியாகயாவது உணர்த்தி விடும். அப்படியாக ஒருவருக்கு கெட்ட நேரம் சூழ்ந்து இருக்கிறது அல்லது யாரேனும் அவர்களுக்கு தீங்கு செய்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பெரிய அளவில் கண் திருஷ்டி அவர்கள் குடும்பத்தை பாதித்திருக்கிறது என்கின்ற போதில் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல தெளிவான அறிகுறியை இந்த பிரபஞ்சமானது காட்டி விடும்.
அப்படியாக உங்கள் வீடுகளில் கெட்ட நேரம் அல்லது உங்களுடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய முக்கியமான சில அறிகுறிகள் இருக்கிறது. அதுவும் அவை குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நடக்கும்.
அவ்வாறு நடந்தால் நீங்கள் மிக கவனமாக இருந்து அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சில பரிகாரங்களை செய்தீர்கள் என்றால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
நம்முடைய இந்து மதத்தில் வெள்ளி, செவ்வாய் வழிபாட்டுக்குரிய மிக சிறந்த தினமாக பார்க்கப்படுகிறது.
அப்படியாக உங்களுடைய வீடுகளில் வெள்ளிக்கிழமைகளில் குறிப்பாக மங்களகரமான பொருட்கள் தொடர்ச்சியாக கைதவறி கீழே விழும், உங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியாக வெள்ளிக்கிழமை வருகின்ற பொழுது நோய்வாய்ப்படும் அல்லது சமயங்களில் அவை இறக்க நேரலாம்.
அதேபோல் குடும்பத்தினர்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் சுகமாக இருப்பார்கள் வெள்ளிக்கிழமை வருகின்ற நேரத்தில் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். சரியாக வெள்ளிக்கிழமை தினங்களில் தான் குடும்பத்தில் பேசக்கூடாத விஷயங்களை பேசி மிகப் பெரிய சண்டே சச்சரவுகள் அல்லது குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும்.
ஆக வெள்ளிக்கிழமை வருகிறது என்றாலே என்ன நடக்க காத்திருக்கிறதோ என்று ஒரு ஐயம் வரும் அளவிற்கு நமக்கு நிறைய சம்பவங்கள் இந்த வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து நடப்பதை காணலாம்.
மேலும் ஒருவர் வீடுகளில் இருக்கக்கூடிய நபர்களுடைய புண்ணிய கணக்குகள் சரியாக இருக்கின்ற பட்சத்தில் கெட்ட நேரம் என்பது முதலில் இவர்களை தாக்குவது அல்ல, அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது பல நல்ல சக்திகள் இந்த தீய சக்தி நுழைய விடாமல் தடுத்துவிடும்.
அதனால் அவர்களுடைய வீடுகளில் செல்லப் பிராணிகள் போன்ற விலங்குகள் வளர்க்கும் பொழுது வருகின்ற தீய தாக்கங்களை செல்ல பிராணிகள் நன்றி விசுவாசத்தின் காரணமாக வாங்கிக் கொள்ளும்.

அவ்வாறு நடக்கிறது என்றால் அதோடு அந்த குடும்பத்திற்கு வந்த கெட்ட நேரம் விலகியது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கெட்ட நேரம் அல்லது கண் திருஷ்டி போன்ற தீய ஆற்றல்கள் நம்மை நெருங்கி வருவது என்பது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கிறதோ, அதேபோல் நாம் செய்யக்கூடிய புண்ணிய காரியை கணக்குகளும் இந்த நேரத்தில் வேலை செய்கிறது என்பதையும் நாம் கவனமாக பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா.
ஆதலால் வீடுகளில் இந்த மாதிரியான நிகழ்வுகளை கவனித்த பிறகு தான் இன்னும் நாம் இறைவழிபாடுகளில் அதிகமாக ஈடுபட வேண்டும். வீடுகளில் மறவாமல் வெள்ளிக்கிழமை சரியாக மதியம் 12 மணிக்கு நீங்கள் வீடுகளில் இருக்கக்கூடிய மூலை முடுக்குகளில் துவங்கி வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் விடுவது அவசியமாகும்.

இந்த நேரங்களில் தவறாமல் காலை மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். அதைவிட முக்கியமாக வீடுகளை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீடுகளில் யாரேனும் ஒருவராவது தினமும் மந்திரங்களை பாராயணம் செய்வது ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் பங்கு கொண்டால் நிச்சயம் தீய தாக்கங்கள் என்பது முற்றிலுமாக விலகி இருள் சூழ்ந்த உங்களுடைய வீடு பிரகாசமாக மாறுவததை காணலாம்.
இன்னும் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு என்றால் உங்களுடைய வீடுகளில் அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயங்களுக்கு சரியாக வெள்ளிக்கிழமை அன்று சென்று விளக்கேற்றி வழிபாடு செய்தாலும் நிச்சயம் அம்மன் அருளால் உங்கள் வீடுகளை சூழ்ந்த தீய சக்திகள் எல்லாம் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |