கடவுள் உங்களை கடுமையாக சோதிக்கிறார் என்பதை உணர்த்தும் 3 அறிகுறிகள்

By Sakthi Raj Feb 25, 2026 05:29 AM GMT
Report

ஒரு மனிதனுடைய ஆன்மீக வளர்ச்சி என்பது மிக வித்தியாசமானது. பல சோதனைகளையும் கஷ்டங்களையும் கடந்து செல்லக்கூடியது. அந்த வகையில் எவர் ஒருவர் ஆன்மீக பயணத்தில் அதிக ஈடுபாடு கொண்டு இருக்கிறார்களோ, அவர்களை கடவுள் இன்னும் மேன்மைப்படுத்த அவர்களுக்கு நிறைய சோதனைகளை கொடுக்கிறார்.

மேலும் அந்த சோதனைகள் என்பது அவர்களுக்கு கொடுக்கக்கூடிய துன்பம் அல்ல, மாறாக அவர்களை இன்னும் சிறந்த மனிதர்களாக மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதாகவே பகவத் கீதை போன்ற புராணங்கள் நமக்கு உணர்த்துகிறது.

அப்படியாக, கடவுள் நம்மை அதிகமாக சோதிக்கிறார் என்பதை உணர்த்தும் 3 அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

கடவுள் உங்களை கடுமையாக சோதிக்கிறார் என்பதை உணர்த்தும் 3 அறிகுறிகள் | Sign Of God Is Testing You To Become Better Person

ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை யாருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்?

ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை யாருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்?

1. நம் வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்றால் கடவுள் நம்முடைய பொறுமையை சோதிக்கிறார் என்று அர்த்தம். மேலும், புராணங்களில் எந்த பகுதிகளை எடுத்துக் கொண்டாலும் நிறைய துன்பத்தை கடந்தவர்கள் தான் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள்.

இந்த கடினமான காலங்கள் தான் நாம் யார்? நம்மை சுற்றியுள்ள நபர்கள் யார்? இந்த உலகத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமக்கு தீர்க்கமாக உணர்த்துகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆன்மீக வாழ்க்கை அல்லது லௌகீக வாழ்க்கையிலும் சிறந்து விளங்க இந்த இக்கட்டான நிலையை நாம் கடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

2. சமயங்களில் திடீர் இன்று இந்த வாழ்க்கை உங்களுக்கு தலைகீழாக மாறி இருக்கும். நீங்கள் எது சரி என்று நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அது தவறாக மாறியிருக்கும். எது தவறு என்று ஒதுக்கி வைத்திருந்தீர்களோ அது சரியாக இருக்கும்.

ஆக உங்களுடைய பார்வையை இறைவன் மாற்றி அமைப்பார். உங்களை இன்னும் ஒழுக்கமான மனிதராக மாற்றுவார். இந்த உலகத்தில் எது உண்மை, பொய் என்று உங்களுக்கு சரியாக உணர்த்தி காட்டுவார்.

கடவுள் உங்களை கடுமையாக சோதிக்கிறார் என்பதை உணர்த்தும் 3 அறிகுறிகள் | Sign Of God Is Testing You To Become Better Person

2026 மார்ச் 6 நடக்கும் சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது?

2026 மார்ச் 6 நடக்கும் சனி பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது?

3. இருப்பினும் என்னதான் சோதனை காலம் நமக்கு கடினமாக இருந்தாலும் கடவுள் உங்களுடன் நான் இருக்கின்றேன் என்பதற்கு நிறைய அறிகுறிகள் உங்களுக்கு அவ்வப்பொழுது காட்டுவார். அதாவது நீங்கள் மிகவும் சோர்ந்து இருக்கின்ற நேரத்தில் ஏதோ ஒரு வழியில் உங்களுக்கான உதவிகள் வந்து சேரும்.

அல்லது நீங்கள் மனம் உடைந்து நிற்கின்ற நேரத்தில் திடீரென்று கடவுளுடைய நாமமும் அவருடைய படமும் உங்கள் கண்களுக்கு காட்சி தரும். இந்த அறிகுறிகள் எல்லாம் நான் உன்னுடன் இருக்கிறேன் இதை கடந்து செல் என்பதை அவர் நமக்கு தீர்க்கமாக உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.

ஆக, ஒரு மனிதன் உண்மை நிலை அறிந்தால் தான் அவன் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்ல முடியும். அந்த உண்மை என்பது பல சோதனைகள் வழியாகத்தான் நாம் புரிந்துகொள்ள முடியும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை இறைவன் எப்பொழுதும் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

மேலும், இந்த வாழ்க்கை என்பது எதை சாதித்தோம் என்பதில் இல்லை, இந்த வாழ்க்கை என்பது ஒவ்வொரு கடினமான காலகட்டங்களை எவ்வாறு கடந்து மீண்டு எழுந்தும் என்பதில் தான் இருக்கிறது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US