சிவனின் அருள் இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
அந்தவகையில், சிவனின் அருள் இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

7 அறிகுறிகள் என்னென்ன?
1. தெய்வீகக் கனவுகள்- சிவ தாண்டவம் கனவில் வந்தால் போராட்டங்கள் நீங்கி வெற்றியடையப் போகிறீர்கள் என அர்த்தம். சிவலிங்கத்தை கனவில் கண்டால் உங்களின் முற்பிறவி சிவ வழிபாட்டுடன் தொடர்புடையதாகும்.
2. எதிர்பாராத ஒலிகள்- தெய்வீக அனுபவங்களை நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறது என்றால் இறைவன் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறியாகும்.
3. சிவ சின்னங்கள் மீது ஈர்ப்பு- திருநீறு, ருத்ராட்சம் போன்ற சிவ சின்னங்கள் மீது ஈர்ப்பு வருகிறது என்றால் அது சிவனின் அருளால் ஏற்படும் மாற்றமாகும்.
4. எதிர்பாராத சமயங்களில் வரும் உதவி- ஒரு பிரச்சனையில் சிக்கி யாரிடம் உதவி கேட்பது என்று தவிக்கும்போது எதிர்பாராமல் யாரவது உதவினால் அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர்களாக இருக்கலாம்.
5. மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்- பிரச்சனைகளில் இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என்றால் சிவன் உங்களிடம் இருக்கிறார் என்று அர்த்தம்.
6. விலங்குகள் மீது அன்பு: சிவனின் அருள் உங்களுக்கு இருந்தால் சிவ குணங்களான கருணை, பார்க்கும் உயிர்களிடத்தில் அன்பு, இரக்கம் ஆகியவை ஏற்படத் துவங்கும்.
7. சோதனைகளில் அதிகரிக்கும் பக்தி- வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது இறைவன் சோதித்தாலும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் இறை பக்தியும் அதிகரிக்கிறது என்றால் இறைவனின் அருள் உள்ளது என்ற அர்த்தம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |