வருடத்தில் ஒரு நாள் மட்டுமே காட்சி கொடுக்கும் நரசிம்மர்- எங்கே தெரியுமா?
துன்பத்தில் இருந்து காப்பவர் பெருமாள். அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். அவர் தனது பக்தன் பிரகலாதனை காக்க நரசிம்மர் அவதாரம் எடுத்தார். அப்படியாக, பக்தன் பிரகலாதனை காக்க பெருமாள் காட்சி கொடுத்த இடம் ஒன்று இருக்கிறது.
இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. அது தான் ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்மர் கோயில் ஆகும். மலையில் இருந்து இந்த கோயிலுக்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது.
கோயிலுக்கு மலை மேல் அமைக்கப்பட்டு இருக்கும் படியில் மேல் ஏறி செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள் சுமார் 1000 படிகள் எற வேண்டும். அதாவது, மிகவும் தீவிர விஷ்ணு பக்தனான பிரகலாதனைக் கொல்ல அவன் தந்தை இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எல்லாம் தோல்வியில் முடிந்தது.
பிறகு பிரகலாதனைக் கொல்ல கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு பகவான் அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார். அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்).
பிறகு, முனிவர்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார் என்பது புராணம். அதோடு, நரசிம்மர் தனது உக்ரத்தை அடக்குவதற்காக சந்தனப் பசையால் மூடப்பட்டிருப்பார்.
இவருடைய உண்மை தரிசனத்தை வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு தரிசனம் செய்ய முடியும். பிற நாட்களில் சுவாமி சந்தனக்காப்புடன் தான் தரிசனம் கொடுக்கிறார்.
மேலும், இறைவனுக்கு சந்தன காப்பு என்றால் சுமார் 500 கிலோ சந்தனம் சாத்தப்படுகிறது. அப்படியாக, வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள்.
இந்த கோயிலை சுற்றி மிகவும் அழகான இயற்கை கட்சியை கண்டு களிக்கலாம். கோயில் வெளியே காங்கதாரா அருவி, ஓடுவது பார்ப்பதற்கே அழகாக இருக்கும். இந்த அருவி நீர் ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக்கொள்ளலாம்.
மேலும், இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை வணங்க தீராத நோய்கள் தீரும். தொடர்ந்து மூன்றாம் நபரால் துன்பம் அனுபவிப்பவர்கள் இந்த அருவியில் குளித்து நரசிம்மரை வழிபாடு செய்ய அவருக்கு எதையும் போராடி ஜெயிக்கும் மன வலிமை பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |