முக்கியமான முடிவுகள் எடுப்பதில் குழப்பமா? இந்த ஒரு எளிய பரிகாரம் செய்து பாருங்கள்
நமக்கு பல நேரங்களில் எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் குழப்பம் அல்லது ஒரு முடிவை நோக்கி பயணம் செல்லும் பொழுது அதை எவ்வாறு சரியாக செய்வது என்கின்ற ஒரு சங்கடம் ஏற்படுவதற்கான சூழ்நிலை இருக்கிறது.
ஆக மன தெளிவு பெறுவதற்கு நாம் ஒரு சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து சிறிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு அந்த தீபத்தின் அருகில் ஒரு வெள்ளை மலரை வைத்து ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை முன்வைத்து கண்களை மூடி தியானம் செய்து அமைதியாக அமர்ந்து விடுங்கள். பிறகு அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடுங்கள்.

இவ்வாறு 23 நாட்கள் நாம் தொடர்ந்து செய்து வரும்பொழுது நம்முடைய மனம் அமைதி பெறுகிறது. பொதுவாகவே, மனம் குழம்பி இருக்கின்ற நேரத்தில் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தாலே மிகப்பெரிய அளவில் முன்னேற்றமும் தெளிவும் கிடைக்கும்.
ஆனால், பலராலும் அதை செய்ய முடிவதில்லை. ஆதலால் பூஜை அறையில் ஒரு விளக்கேற்றி செய்யும் பொழுது நமக்கு குழப்பங்கள் விலகுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |