கனவை நினைவாக்கும் சிறுவாபுரி முருகன் வழிபாடு
சொந்தமாக வீடு கட்டுவது என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் கனவாகவும் ஆகும். ஏனென்றால் சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் அங்க அடையாளம் மற்றும் கௌரவம் ஆகும்.
பலருக்கும் இந்த அடையாளம் கிடைப்பது இல்லை. எனவே அவர்களது குடும்ப கஷ்டங்கள் நீங்கி அவர்களுக்கு வீடு வாசல் செழிப்பு தன்மையாக வளர மிக சிறந்த பரிகாரமான முருகப்பெருமான் வழிபாட்டை பற்றி தான் இன்று இந்த ஆன்மீக தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
வீடு கட்டும் கனவு நினைவாக வழிபடு பொதுவாக ஒரு மனிதன் வீடு கட்ட வேண்டும் என்றால் அவருக்கு இறைவன் அருள், குலதெய்வம் அருள், முன்னோர்கள் மற்றும் நவகிரக அருள் என்பது அடிப்படையாக தேவைப்படும் அருள் ஆகும்.
அதன் அடிப்படையில் வீடு மனை வாங்குவதற்கு செவ்வாய் பகவானின் அருள் வேண்டும் செவ்வாய் பகவானின் அருளை பெறுவதற்கு அவருக்குரிய அதிபதியான முருகப்பெருமானின் அருள் வேண்டும்.
முருகனை வழிபட வேண்டும் என்று பொதுவாக குறிப்பிட்டுள்ளோம். எந்த முருகனை நாட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? என்று அனைவருக்கும் குழப்பம் ஏற்படும். இந்த அனைத்து குழப்பத்திற்கும் தீர்வே இந்த பதிவு.
எந்த முருகனாக இருந்தாலும் அருள் ஒன்றுதான் என்றாலும் அதிலும் மிகவும் முக்கியமாக சிறுவாபுரி முருகனின் அருளானது அவசியம்.
சிறுவாபுரி ஆலயத்திற்கு செல்லும் வசதி உடையவர்கள் அங்கு சென்று வழிபட்டு அவரின் அருளை பெறலாம். அவ்வாறு அவரின் அருளை நேரில் சென்று பெற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
திங்கட்கிழமை அன்றே வீட்டில் அகல் விளக்கு, நெய் மற்றும் தாமரை திரி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி எப்பொழுதும் போல் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஆலயத்திற்கு செல்வதற்காக வாங்கி வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டை மூன்று முறை வலம் வந்து அருகில் இருக்கும்.
முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு முன்பாக அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய சொந்த வீடு கனவு நினைவாக வேண்டும் என்ற கோரிக்கையை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
கோவிலுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் முருகனின் உருவப் படத்தை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு மலர்கள் வைத்து அந்த சிறுவாபுரி LXSEZAFனே உங்கள் வீட்டில் குடியிருப்பதாக நம்பி இந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.
தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் வீடு கட்டி முடித்த பிறகு முருகனுக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபட வேண்டும்.
முருகப்பெருமானிடம் முழு நம்பிக்கை வைத்து இந்த முறையில் தீபமேற்றி வழிபட நம்முடைய சொந்த வீடு கட்டும் கனவை அவர் விரைவிலேயே நிறைவேற்றுவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |