சித்ரா பௌர்ணமியில் கட்டாயமாக இதை செய்ய வேண்டும்

Parigarangal Chitra Pournami
By Sakthi Raj Apr 18, 2024 04:14 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி மிகச் சிறப்பு வாய்ந்தது.சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும்.

இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.

இந்த வருடம் ஏப்ரல் 23 ஆம் தேதி சித்திரா பௌர்ணமி வருகின்றது.

சித்ரா பௌர்ணமியில் கட்டாயமாக இதை செய்ய வேண்டும் | Sithira Pornami April23 2024

இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சக்தியும் சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறுகொண்டு வெளிப்படும் என்பது நம் ஐதீகம்.

ஆகவே, அந்த நாளில் கோயிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை வாழ்வில் செம்மையுறச் செய்யும் என்பது நம்பிக்கை. கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் வீட்டின் பூஜை அறையையே கோயிலாக பாவித்து, நாமே பூஜைகளும் வழிபாடுகளும் செய்யலாம்.

சித்ரா பௌர்ணமியில் கட்டாயமாக இதை செய்ய வேண்டும் | Sithira Pornami April23 2024

அதேபோல், பூஜையறையில் உள்ள சுவாமி படங்களையும் துடைத்து வைத்திருங்கள். பிறகு, சுவாமி படங்களுக்கு, சந்தனம், குங்குமம் இடுங்கள். தொடுத்து வைத்துள்ள மலர்களால் அலங்கரியுங்கள். சித்ரா பெளர்ணமி நாளில், உங்கள் ‌குலதெய்வத்தை வணங்குங்கள்.

அதேபோல், உங்களுக்கான இஷ்ட தெய்வத்தை, உகந்த மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள். அடுத்து, வீட்டு தெய்வம் என்பார்கள்.சித்த்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு வீரியம் அதிகம்.

சித்ரா பௌர்ணமியில் கட்டாயமாக இதை செய்ய வேண்டும் | Sithira Pornami April23 2024

அதாவது வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ, கர்ப்பிணியாகவோ இருந்து உயிரிழந்திருப்பார்கள். அவர்களின் படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம், குங்குமம் இடுங்கள். மலர்களால் அலங்கரியுங்கள். குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான் சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியமான வழிபாடு.

எனவே இந்த நாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்த தெய்வங்களை வழிபடுங்கள். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (18/04/2024)

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (18/04/2024)


அக்கம் பக்கத்தாருக்கு நைவேத்தியப் பிரசாதத்தை வழங்குங்கள்.அதேபோல், மாலையில் பூஜை அறையில் விளக்கேற்றுங்கள்.

வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள். மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.

சித்ரா பௌர்ணமியில் கட்டாயமாக இதை செய்ய வேண்டும் | Sithira Pornami April23 2024

மாலை பூஜையில், பயறு வகைகள் கொண்டு சுண்டல் மற்றும் கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள். அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்யுங்கள். மனதார சந்திர பகவானிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

முக்கியமாக, சித்ரா பெளர்ணமி தினத்தன்று இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்குங்கள்.

வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும். இல்லத்தில் இதுவரை இருந்த சண்டை சச்சரவெல்லாம் போய், மகிழ்ச்சியும், குதூகலமும் குடிகொள்ளும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US