மரண படுக்கையில் இருந்து காக்கும் சக்தி வாய்ந்த சிவன் மந்திரம்
இந்த பூமியில் நிலையானது என்று எதுவும் இல்லை.பிறந்தால் இறந்தாகவேண்டும்,மலர்ந்தால் உதிர்ந்தாக வேண்டும்.அப்படியாக மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம்.அதில் வயது முதிர்ந்து நோய் தொற்றால் இறந்து போகும் பொழுது மனதை இது இயறக்கை என்று தேற்றிக்கொள்ளமுடியும்.
ஆனால் நன்றாக பேசிய நபர் அடுத்த சில வினாடிகளில் ஏதேனும் விபத்துகள் மற்றும் எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால் அந்த தாக்கம் நம்மை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்திவிடும்.மேலும் அதை துர்மரணம் என்போம்.
இவ்வாறு துர்மரணம் நிகழாமல் இருக்கவும்,கடவுளின் ஆசி கிடைத்து வளமான வாழ்க்கை வாழவும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி பார்ப்போம்.
சிவபெருமானை எவர் ஒருவர் வழிபட தொடங்குகிறார்களோ அவர்களுக்கு உடல் அளவு மரணம் உண்டாகலாம்.ஆனால் உயிர் எப்பொழுதும் இறைவனுடன் ஒன்றி இருக்கும்.அவரை வழிபட நம்முடைய கர்மவினைகள் படிப்படியாக குறைவதை நம் கண்களால் பார்க்கமுடியும்.
மேலும்,அவரின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்ல அவர்களுக்கு துர் மரணம்,பிறரால் துன்பம் போன்ற நிகழ்வுகள் உண்டாகுவதில்லை.
மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
சிவனுக்குரிய மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒருவர் முறையாக ஜபித்தால் விதிப்படி அவர்கள் வாழ வேண்டிய முழுமையான வாழ்வை வாழ்ந்த பிறகே மரணம் அவர்களை அண்டும். மேலும் மரண தருவாயில் இவர் புழைக்கவே மாட்டார் என்று சொன்ன உயிரும் இந்த மந்திரத்தால் காக்கப்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |