சிவன் பற்றிய ஐந்து விஷேச தகவல்
By Sakthi Raj
சிவபெருமான் மீது சிவனடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே சைவத்திருமுறைகள்.
சிவபெருமான் மீது தீராத காதலை கொண்டிருந்தார் சிவனடியாரான மாணிக்கவாசகர். அதனால் அவரை 'அழுது அடியடைந்த அன்பர்' என சொல்வர்.
தேவாரம் பாடிய மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். இவர்கள் சிவன் கோயில்களுக்கு சென்று பதிகம் பாடினர். இந்தக் கோயில்களே 'பாடல் பெற்ற தலங்கள்' எனப்படுகிறது.
ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர்.
தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்.
சோழ மன்னரான அநபாயனிடம் அமைச்சராக பணிபுரிந்தவர் சேக்கிழார்.
சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர், தில்லைவனம் என்றும் பெயருண்டு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |