ஆற்றின் நடுவிலே அமைந்திருக்கும் முருகன் கோவில்

By Sakthi Raj May 27, 2024 06:30 AM GMT
Report

முருகன் கோவில் என்றாலே மலை மீது அமைந்திருக்கும் என்பதற்கு விதிவிலக்காய் ஆற்றின் நடுவிலே அமைந்திருக்கும் முருகன் கோவிலைப் பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

நெல்லையில் உள்ள மிக முக்கிய கோவில்களில் குறுக்குத்துறை முருகன் கோவிலும் ஒன்றாகும். ஆண்டுக்கு ஒருமுறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய கோவில் இது.

பல வருடங்களுக்கு மேலாக ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளத்தில் மூழ்கினாலும் இன்றும் நிலைத்து நிற்பதன் காரணத்தை யாராலும் கணித்துவிட முடியவில்லை.

ஆற்றின் நடுவிலே அமைந்திருக்கும் முருகன் கோவில் | Thamirabarani Murugan Koyil Murugan Temples Bakthi

திருநெல்வேலியில் குறுக்குத்துறை என்ற பகுதியில் இந்த முருகன் கோவில் அமைந்துள்ளதால் இதை குறுக்குத்துறை முருகன் என்று அழைக்கிறார்கள்.

இந்த கோவிலின் பிரதான தெய்வமான முருகன் இங்கு சுயம்புவாக தோன்றியதால், அவர் தோன்றிய இடத்திலேயே முருகன் கோவில் கட்டப்பட்டது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சமயம் இந்த கோவிலில் உள்ள மூலவர், உண்டியல், சப்பரம் ஆகியவற்றை அருகிலிருக்கும் மேலக்கோவிலுக்கு எடுத்து சென்று விடுவார்கள்.

வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் கோவிலை சுத்தம் செய்துவிட்டு கொண்டு வந்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்தனை வெள்ளத்திலும் மூலவர் அங்கேயேதான் இருப்பார். எப்பேற்பட்ட வெள்ளம் வந்தாலும் அதை சமாளிப்பதற்கு காரணம் இந்த கோவிலின் அமைப்புதான்.

இக்கோவிலின் முன்புறம் படகு போல கூர்மையான முனையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் வரும்போது இந்த முனை பொங்கி வரும் நீரை கிழித்தப்படி நிலையாக நிற்கிறது.

ஆற்றின் நடுவிலே அமைந்திருக்கும் முருகன் கோவில் | Thamirabarani Murugan Koyil Murugan Temples Bakthi

இந்த குறுக்குத்துறை முருகனை மனமுருக வேண்டினால், வேண்டிய வரங்களை தருகிறார்.திருஉருமாமலை’ என்று அழைக்கப்படும் குறுக்குத்துறை முருகன் கோவிலின் பெயர் காரணம் என்ன தெரியுமா?

தெய்வங்களின் உருவங்களை செதுக்கிட ஏற்றதாக இந்த பாறைகள் இருந்ததால் சிற்பிகள் இந்த பாறைகளில் சிலைகளை செதுக்கி உருவங்களை கொடுத்தார்கள்.

இந்த பாறையிலிருந்துதான் திருச்செந்தூரில் உள்ள முருகன் சிலை வடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.வள்ளி, தெய்வானையோடு கூடிய முருகன் திருஉருவத்தை செதுக்கிய சிற்பி அதை அப்படியே பாறையிலேயே விட்டுவிட்டார்.

சாதுர்மாஸ்ய விரதத்தின் ஆச்சர்யப் பலன்கள்

சாதுர்மாஸ்ய விரதத்தின் ஆச்சர்யப் பலன்கள்


பிறகு இங்கே ஆற்றுக்கு நீராட வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த முருகனை வழிப்பட தொடங்கி பிறகு ஒரு கோவிலை உருவாக்கினார்கள்.

மூலவர் சுப்ரமணிய சுவாமி பாறையில் குடையப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சித்திரை மாதம் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

இங்கு வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைப்பெறும். எனவே இத்தகைய சக்தி வாய்ந்த கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று முருகனை தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US