அழகர் கோவில் மலை ஏறுவதற்கு ஆறு நாட்கள் தடை விதித்த நிர்வாக குழு: என்ன காரணம்?
கோவில் நகர் என்று பெயர் பெற்ற சிறப்பு மிக்க மதுரையில் பழமையான கோவில்கள் மற்றும் வரலாற்ற சிறப்புமிக்க இடங்கள் பல காணப்படுகின்றது.
இதனால் மதுரை மாவட்டத்தில் ஏனைய மாவட்ங்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாக் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கின்றது.
அந்த வகையில் மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் கோவில் வரலாற்று பாரம்பரியத்தை எடுத்தியம்பும் கள்ளழகர் தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.அதற்கு இந்தியர்கள் மட்டுமன்றி உலகில் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றார்கள்.
அதுமட்டுமன்றி அழகர் கோவிலின் மலைப்பகுதியில் வீற்றிருக்கும் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை கோவிலும், அதற்கு மேல் பகுதியில் காணப்படும் நூபரகங்கை தீர்த்தம் மற்றும் ராக்காயி அம்மன் கோவிலுக்கும் தினசரி மக்கள் கூட்டம் மலையேறிச்சென்று தரிசனம் பெறுவது வழக்கம்.
மலை ஏறுவதற்கு ஆறு நாட்கள் தடை
ஆனால் நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலான 6 நாட்களுக்கு வாகனங்கள் அழகர் கோவில் மலைக்குச் செல்ல அனுமதி இல்லை என்று கோவிலின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகர் கோவிலின் மலை ஏறுவதற்கான பகுதியில் அதாவது, மலைகேட் என்று கூறப்படும் மலையடிவாரப் பகுதியில் இருந்து சோலைமலை முருகன் கோவில் வரை தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதன் காரணமாகவே இவ்வாறு மலைப்பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சோலைமலை முருகன் கோவில் மற்றும் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில்களில் வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடைபெறும் எனவும் பக்தர்கள் நடைபாதையாகச் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்களுக்கு மட்டுமே குறித்த தடை உத்தவு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.