கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைகளை தவிடுபொடியாக்கும் முருகப்பெருமான் மந்திரம்
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு பல நேரங்களில் ஏன் என்று விடை தெரியாமல் தவிப்பது உண்டு. அந்த கஷ்டங்களில் நமக்கு செய்வதறியாத நிலையும், யாராவது வந்து உதவ மாட்டார்களா என்கின்ற தவிப்பும் இருக்கும்.
அந்த வகையில் முன் ஜென்ம கர்ம வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் 6-7 மணி வரைக்கும் சூரிய பகவானை மற்றும் முருகப்பெருமானை மனதார நினைத்து கைகளை தலைக்கு மேல் தூக்கி உள்ளம் உருகி கந்த குரு கவசம் இந்த வரிகளை பாராயணம் செய்கின்ற பொழுது அவர்களுடைய மனக்குறைகளும் கஷ்டங்களும் விலகி விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

கந்த குரு கவச வரிகள்:
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டுடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்கு திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்
இந்த மந்திரத்தை தினமும் நீங்கள் பாராயணம் செய்து வருகின்ற பொழுது விரைவில் உங்களுடைய மன கவலைகளும் வாழ்கையில் உள்ள கர்ம வினைகளும் வீடுகளில் சூழ்ந்துள்ள தீய அதிர்வலைகளும் எல்லாம் விலகி வாழ்க்கையில் உங்களுக்கு அடுத்த கட்ட நகர்வை நோக்கி கூட்டிச் செல்லக்கூடிய ஒரு அற்புதமான சக்தி பிறக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |