சில நாட்களில் அள்ளிக்கொடுக்கப் போகும் சூரிய பகவான்: எந்த ராசியினருக்கு?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கும், இதனால் சில ராசியினர் நற்பலன்களையும், சிலர் அசுப பலன்களையும் பெறுகின்றனர்.
வருகிற ஏப்ரல் 14ம் திகதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது, இதற்கு முந்தைய நாளான 13ம் திகதி சூரியன் பெயர்ச்சி அடைகிறார்.
மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளால், மே 13ம் திகதி வரை இது நீடிக்கவுள்ளது.
தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய நாள் சூரிய பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது, சூரியனின் அருளால் எந்தெந்த ராசிக்கு நல்லது நடக்கப்போகிறது என தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு எதிர்பாராத பலன்களை தரப்போகிறார் சூரிய பகவான், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றம் உண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், சண்டை- சச்சரவுகள் முற்றுப்பெறும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு நல்ல காலம் என்றாலும் செலவுகள் அதிகரிக்கலாம், எனவே சேமிப்பை பத்திரப்படுத்தி வைப்பது நல்லது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும், புதிய வேலைகள் தொடங்கலாம்.
கடகம்
சூரிய பெயர்ச்சி உங்களுக்கு செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும், பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள், நீண்டநாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் முடிவடையும், புதிய பொறுப்புகள் தேடி வரும், குழந்தைகள் தொடர்பில் நல்ல செய்திகள் வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |