சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசைத் திருவிழா
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4ஆம் திகதி நடைபெறுகிறது.
இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்படப் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வனப்பகுதியில் குடில் அமைத்துத் தங்கி பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல் என பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வழிபாடு செய்வார்கள்.
இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல்முதல் 6ஆம் திகதி வரை தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகம் சார்பில் குடில் அமைக்கப்படுகிறது.
இதில் கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பணம் செலுத்தி குடிலை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்ளலாம்.
திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை வசதிகள், தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |