முருகப்பெருமானுக்கு உலகெங்கிலும் பக்தர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவருக்கு உலகம் எங்கிலும் கோவில்கள் இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
மேலும், அவருடைய ஒவ்வொரு கோவில்களும் ஒவ்வொரு சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.
அப்படியாக, ஈரோடு மாநகராட்சியில் உள்ள திண்டல் மலையில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைப்பதற்கான வேலை அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறார்கள்.
சுமார் 27 அடி உயரத்தில் அமைய உள்ள இந்த பிரம்மாண்ட சிலை உலக அளவில் உள்ள ஆன்மீக மற்றும் சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இந்த முருகன் சிலை உருவாக்குவதற்காக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சுமார் 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர பாபு மற்றும் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியவர்கள் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்கள்.
மலேசியாவில் இருக்கக்கூடிய பத்துமலை முருகன் சிலை 140 அடி உயரத்தைக் கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டன் பாளையம் பகுதியில் சமீபத்தில் 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் கோயில் அமைக்கப்பட்டது.

ஆனால் இவையெல்லாம் விட மிக பிரம்மாண்டமாக தென்றல் மலையில் அமையுள்ள இந்த முருகன் சிலை உலகெங்கிலும் இருக்கக்கூடிய பக்தர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டும் அல்லாமல் உலக புகழ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாநகரத்தின் முக்கிய அடையாளமாக திகழும் திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் இந்த சிலை அமைக்கப்படுவது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த திட்டத்தின் மறுபகுதியாய் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
மேலும் மலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரிவான திட்டங்களுடன் இந்த கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த பிரம்மாண்ட முருகன் சிலை அமைப்பது வழியாக ஈரோடு மாவட்டம் உலகளவில் ஒரு சிறந்த ஆன்மீக தலமாக விளங்கும் என்று குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுமான பணிகள் குறிப்பிட்ட சில காலத்தில் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |