தைப்பூச திருவிழா.., பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

By Yashini Dec 25, 2024 08:55 AM GMT
Report

பழனி முருகன் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம்.

அதன்படி பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை முன்னிட்டு தற்போது பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.

தைப்பூச திருவிழா.., பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் | Special Yagna At Palani Murugan Temple

இந்நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், தைப்பூச திருவிழா அனுமதி பெறுவதற்கும் பழனி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி ஆனந்தவிநாயகர் சன்னதி முன்பு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி யாகம் நடந்தது.

தைப்பூச திருவிழா.., பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் | Special Yagna At Palani Murugan Temple

தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச அபிஷேகம் நடைபெற்று விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

பின்னர் மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.          


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US