இந்த பிரபஞ்சம் 11:11 - 11:11 வழியாக உங்களுக்கு என்ன செய்தி சொல்கிறது தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமாக பார்க்கப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் நாம் குறிப்பிட்ட சில எண்களை அடிக்கடி பார்க்கிறோம் என்றால் அந்த எண்கள் வழியாக இந்த பிரபஞ்சம் நமக்கு ஒரு சில செய்திகளை சொல்ல இருப்பதின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அப்படியாக 11:11என்ற எண்கள் உங்கள் கண்களுக்கு அடிக்கடி தெரிகிறது என்றால் இந்த பிரபஞ்சம் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
மேலும், சிலர் இந்த எண்களை பார்க்கும் பொழுது அவர்கள் மனதில் சில வேண்டுதல்களை வைத்துக் கொள்வார்கள். அதாவது அந்த எண்களை பார்த்து நாம் சில வேண்டுதல்களை வைக்கும் பொழுது நாம் நினைத்தது நடக்கக்கூடும் என்ற ஒரு பல நம்பிக்கைகள் இருந்து வருகிறது.
அப்படியாக இந்த பிரபஞ்சம் 11:11 எண் வழியாக நமக்கு சொல்லக்கூடிய தகவல் என்ன? அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அற்புதங்களை பற்றியும் 2026 ஆம் ஆண்டு ஒவ்வொரு நபர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமையப் போகிறது என்பதை பற்றி நமக்கு டாரட் கார்டு ஜோதிடம் வழியாக பகிர்ந்து கொள்கிறார் ரக்ஷனா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |