உங்கள் கனவில் சிவலிங்கத்தை கண்டால் என்ன நடக்கும் தெரியுமா?
மனிதர்களின் இயல்பான வாழ்க்கையில் கனவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இந்த கனவு பல வடிவங்களில் வருகிறது. சில நேரங்களில் இதுவரை நம் பார்த்திடாத உருவங்கள், இடங்கள் கூட நம் கனவில் காண முடிகிறது.
மேலும் சாஸ்திர ரீதியாக கணவருக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சில தொடர்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதேபோல் உளவியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் கனவு நம்முடைய ஆழ்மனதில் பிரதிபலிப்பு என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில், பலருக்கும் கனவுகளில் அன்றாட வாழ்க்கை தொடர்பான விஷயங்களே வருகிறது. ஆனால் சமயங்களில் சிலருக்கு தெய்வங்களும் கனவில் வருவதை நாம் பார்க்க முடிகிறது. பொதுவாக, அவ்வளவு எளிதாக ஒருவருக்கு தெய்வங்கள் கனவில் காட்சி கொடுப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒருவருடைய கனவில் சிவலிங்கத்தை கண்டால் என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய கனவில் சிவலிங்கத்தை காண்பது என்பது நமக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் வருவது அறிகுறியாக இருக்கிறது. காரணம் சிவபெருமான் ஆழகால விஷத்தை உண்டு ஆபரத்திலிருந்து உலகத்தையே காத்தவர் என்பதினால் நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சனைகள் அனைத்தையும் அவர் தீர்த்து வைப்பார் என்பதை இந்த கனவு நமக்கு உணர்த்துவதாக அதிகம்.
அப்படியாக, கனவில் நீல நிற சிவலிங்கத்தை பார்த்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை குறிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிற சிவலிங்கத்தை உங்கள் கனவில் காணும் பொழுது உங்களுக்கு பணம், திருமணம், வீடு, வாகனம், காதல், கர்ப்பம் பயணம் போன்ற விஷயங்கள் எல்லாம் உங்கள் விருப்பப்படி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் வெள்ளை நிறத்தில் சிவலிங்கத்தை கனவில் கண்டால் இந்த உலகத்தினுடைய மிகப்பெரிய சக்தி உங்களுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருப்பதை குறிப்பதாகும். வெள்ளை நிற சிவலிங்கத்திற்கு நீங்கள் பூஜை செய்வது போல் கனவு கண்டால் சிவபெருமானை சரணடைவதற்கு உங்களுடைய ஆன்மா விரும்புவதாக அர்த்தம்.
அதேபோல் கருப்பு நிற சிவலிங்கத்தை உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் வாழ்க்கையில் ஒரு தனித்துவமாக விளங்கப் போகிறீர்கள் என்பதின் அர்த்தம் ஆகும். மேலும் சிவபெருமானே உங்களை நெருங்கி வருகிறார் உங்களை இன்னும் ஆன்மீகத்தில் வளர்ச்சி செய்யப் போகிறார் என்பதை குறிப்பதாகும்.
அதைப்போல் ஒருவருடைய கனவில் பச்சை நிறத்தில் சிவலிங்கத்தை பார்த்தால் இது மிகவும் அரிதான கனவு வரும். இது போன்ற கனவுகள் வந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வர போவதின் அறிகுறியாகவும்.
அவர்களுக்கு நீண்ட நாட்கள் முன்பு இழந்த ஏதேனும் ஒரு பொருளை திரும்ப அவர்கள் பெறப் போகிறார்கள் என்பதையும் குறிக்க கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கனவு ஒருவருக்கு வெற்றியை குறிக்கக்கூடிய கனவாகவே கருதப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |