எப்பொழுதும் நல்லதே நடக்க இந்த 3 விஷயங்களை வீட்டில் செய்யுங்கள்

By Yashini May 03, 2024 06:42 AM GMT
Report

வீட்டிலும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டுவதற்கு ஆன்மிக ரீதியாக பல எளிய பரிகார முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆன்மிக ரீதியாக நம்முடைய வீட்டில் இதை செய்தால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, மாற்றமான சூழல் ஏற்படும்.

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை விரட்டி எப்பொழுதும் நல்லதே நடக்க வீட்டில் இந்த 3 விஷயங்களை வீட்டில் செய்யுங்கள்.

வீட்டின் வாசற் படியில் செய்யவேண்டியவை

வீட்டின் நிலை வாசலில் வெளியில் இருந்து வீட்டிற்குள் வரும் போது வலது புறம் ஒரு சிறிய பாத்திரத்தில் உப்பு வைத்து வையுங்கள்.

கல் உப்பு வைப்பது மிகவும் சிறப்பு. அதன் மீது ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, ஒரு பாதியில் மஞ்சள் அல்லது சந்தனம், குங்குமம் வைத்து வையுங்கள்.

எப்பொழுதும் நல்லதே நடக்க இந்த 3 விஷயங்களை வீட்டில் செய்யுங்கள் | Spiritual Remedy For Remove Negativity From Home

இது வீட்டில் இருக்கக் கூடிய மற்றும் வெளியில் இருந்து வீட்டிற்குள் வரக் கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, வீட்டில் எப்போதும் நேர்மறை அதிர்வலைகள் நிறைந்திருக்க செய்யும்.

இந்த உப்பினை வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று எடுத்து, தண்ணீரில் கரைத்து விடுங்கள். 

பூஜை அறையில் செய்யவேண்டியவை

வீட்டின் வாசலுக்கு வெளிப்புறத்தில் பசுஞ்சாணத்தால் மெழுகுவது நல்லது. பஞ்சகவ்யங்களில் பசுஞ்சாணமும் ஒன்று.

அப்படி மெழுக முடியாதவர்கள் வீட்டின் வாசலில் போடும் கோலத்திற்கு நடுவே, சிறிது சாணம் வைத்து, அதின் மீது ஒரு பூஜை வைப்பது நல்லது.

எப்பொழுதும் நல்லதே நடக்க இந்த 3 விஷயங்களை வீட்டில் செய்யுங்கள் | Spiritual Remedy For Remove Negativity From Home

அல்லது வீட்டிற்குள் நுழையும் இடத்தில் மஞ்சளும், அரிசியும் கலந்த அட்சதை செய்து வைக்கலாம்.

வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் அட்சதை வைத்து, அதோடு இரண்டு காசுகளையும் போட்டு வைக்கலாம்.

வீட்டில் மகிழ்ச்சியை ஈர்க்கும் பொருள்

வீட்டின் உட்புறம் இடது பக்கத்தில் ஒரு சிறிய தட்டில் பச்சை கற்பூரத்தை வையுங்கள்.

அதன் மீது தீபாராதனை காட்டுவதற்காக வைத்திருக்கும் சாதாரண கற்பூரத்தையும் சிறிது பொடி பண்ணி வையுங்கள்.

எப்பொழுதும் நல்லதே நடக்க இந்த 3 விஷயங்களை வீட்டில் செய்யுங்கள் | Spiritual Remedy For Remove Negativity From Home

பச்சை கற்பூரம் நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதுடன், வீட்டில் தெய்வீக தன்மையை எப்போதும் நிலைத்து இருக்க செய்யும்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து நிம்மதி, மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US