நீங்கள் தூங்கும் நிலையே உங்களின் ஆளுமை சொல்லும்.. எப்படி தெரியுமா ?
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி ஒருவருடைய உடல் அமைப்பு வடிவம் மற்றும் அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் வைத்து அவர்களுடைய ஆளுமை திறனை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒருவர் தூங்கும் நிலை வைத்து நாம் அவர்களுடைய ஆளுமை திறனை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே, ஒரு மனிதனுக்கு நல்ல உறக்கம் இருந்தால் தான் அவன் தெளிவாக மறுநாள் வேலை செய்ய முடியும். அப்படியாக தூங்கும் பொழுது ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப தூங்குகிறார்கள். அந்த வகையில் தூங்கக்கூடிய நிலை வைத்து நாம் அவர்களுடைய ஆளுமை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிடம் சொல்கிறது.

நேராக தூங்கும் நிலை:
நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய முது கீழ் இருக்கும் படி நேராக தூங்கினால் நீங்கள் மிகவும் தெளிவான எண்ணம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. உங்களிடம் இயல்பாகவே நம்பிக்கையும் அமைதியும் வெளிப்படுமாம். தேவையற்ற மோதல்களை நீங்கள் தவிர்க்க கூடிய நபராக இருப்பீர்கள்.
ஒரு சாய்த்து தூங்கும் நிலை:
நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் தூங்கும் பொழுது நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமான நபர் என்பதை அவை வெளிப்படுத்துகிறது. அதாவது புதிதாக அறிமுகமானவர்களுடன் கூட நீங்கள் நீண்ட நாட்கள் பழகியது போல் பேசக்கூடியவர்கள் என்பதை அவை குறிக்கிறது. அதை போல் நீங்கள் திறந்த மனப்பான்மை மற்றும் நட்பு ரீதியாக பழகக் கூடியவர்கள்.

குப்புற தூங்கும் நிலை:
நீங்கள் தூங்கும் பொழுது உங்களின் வயிற்றை அடியில் வைத்து குப்புற நிலையில் தூங்கினால் நீங்கள் மிகவும் ஆழ்ந்த விசுவாசமான இயல்பை கொண்டவர்கள் என்று குறிக்கிறது. உங்களுடைய இதயம் எப்பொழுதும் குடும்பத்தினருடனும் நண்பர்களிடமும் நெருங்கி பழகக்கூடிய அமைப்பை பெற்று இருக்கிறது. அதை போல் நீங்கள் மிகவும் லட்சியவாதியாக இருக்கக்கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |