செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சக்கர வழிபாடு- தினம் 3 முறை துதி கூறினால் போதும்
எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு.
மகாசக்தியை எப்போதும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் தான் வழிபட முடியும். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள் ஆகும்.
மகாசக்தியின் அருளை பெறுவதற்கு ஸ்ரீசக்கர வழிபாடு சிறந்தது என தேவி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
தேவி என்பவளே சக்திதான். சக்தி என்பதுதான் உலகம் முழுவதும் பரவலாக இருக்கிறது.
அந்தவகையில் ஸ்ரீசக்கரத்தை எப்படி வழிப்படலாம் எனவும் வழிப்படுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
ஸ்ரீசக்கர வழிபாடு என்றால் என்ன?
ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரமானது பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகவும் கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட இந்த ஸ்ரீசக்கரத்தை வழிப்படுவதன் மூலம் ஒருவருடைய வாழ்வில் பல மகிமைகள் ஏற்படும் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீசக்கரத்தை நினைத்துக்கொண்டு ஒருவர் பூஜை செய்தால் மனதில் இருக்கும் அனைத்து குழப்பங்களும் நீங்கும். செய்யும் காரியம் அனைத்தும் வெற்றிப்பெறும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்ரீசக்கரத்தில் ஒன்பது நிலைகள் உள்ளன. இதன் ஒன்பது நிலைகளையும் பூஜை செய்வதனால் தான் ஸ்ரீசக்கரத்தை நவா ஆவரணம் எனவும் அழைக்கின்றார்கள்.
நவா ஆவரணம்
முதல் ஆவரணம்
முதல் ஆவரணத்தின் கிரகமான வியாழன் இருக்கிறார். இதை வழிப்பட்டால் அனைத்து செல்வங்களும் நிலைத்து, புத்தி பலப்பட்டு வாழ்வில் மாற்றம் ஏற்படும்.
இரண்டாவது ஆவரணம்
இரண்டாவது ஆவரணமானது பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபமாகும். இதை வழிப்படுவதன் மூலம் தீய எண்ணங்கள் நீங்கி மனம் தூய்மையாக இருக்கும்.
மூன்றாவது ஆவரணம்
மூன்றாவது ஆவரணத்தில் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் இருப்பதாக கூறிகின்றனர். இவர்கள் பக்தியின் மேன்மையை வழிப்படுபவர்களுக்கு வழங்குகிறார்.
நான்காவது ஆவரணம்
நான்காவது ஆவரணத்தில் 14 யோகினிகள் இருக்கின்றனர். இங்கு சந்திரன் வடிவில் அன்னை காட்சியளித்து புத்திய பாக்கியத்தை பெண்களுக்கு வழங்குவார்.
ஐந்தாவது ஆவரணம்
ஐந்தாவது ஆவரணத்தில் பத்து கோணங்களில் பத்து யோகினிகள் இருக்கின்றனர். இவர்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தை பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.
ஆறாவது ஆவரணம்
ஆறாவது ஆவரணமான இந்த ஆவரணத்தில் அன்னையானவள் சூரியன் வடிவில் இருந்து பொறாமையை அகற்றி , அருளின் ஒளியை ஏற்றுகிறார்.
ஏழாவது ஆவரணம்
ஏழாவது ஆவரமான இந்த ஆவரணத்தில் புதன் கிரகம் இருக்கிறது. இதை பூஜிப்பதன் மூலம் ஒருவருக்கு ஆத்ம ஞானம் அதிகரிக்கும்.
எட்டாவது ஆவரணம்
எட்டாவது ஆவரணமான இந்த ஆவரணத்தில் மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருப்பார். இதில் அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் ஆயதங்கள் பக்தர்களின் வழிப்பாட்டிற்காக இருக்கின்றது.
ஒன்பதாவது ஆவரணம்
ஒன்பதாவது ஆவரணமான இந்த ஆவரணமானது பேரின்பத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக விளங்குகிறது. இதில் அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருப்பதால், பூஜை செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.
எப்படி பூஜை செய்ய வேண்டும்?
-
ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும்.
- ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும்.
- மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.
"சிவசக்கரம் ஒரு நான்கும்
வடதிசையை நோக்க
தேவியுடன் ஐந்து வட்டம்
தென்புறமே பார்க்க பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட
யோனியதுவாக சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக
சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக
நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய்
நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்" என்ற மந்திரத்தை கூறி தூபதீபம் காட்ட வேண்டும்.
- பின் ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு தட்டில் மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாக ஊற்ற வேண்டும்.
- தினமும் பூஜை செய்யும் போது தவறாமல் இந்த துதியை கூறி வழிப்பட வேண்டும்.
தினமும் கூற வேண்டிய துதி
அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!
துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி!
நல்லோர்க்கு உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!