போராட்டமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சக்தி வாய்ந்த ஆலயம்

By Sakthi Raj Apr 03, 2025 05:45 AM GMT
Report

வாழ்க்கை ஒரு புரியாத புதிர் என்று சொல்லுவார்கள். ஆனால், உண்மையில் மனிதர்கள் தான் புரியாத புதிர். இந்த பிரபஞ்சம் அதனுடைய வேலையை எப்பொழுதும் சரியாக செய்யும். நாம் சரி என்றாலும் வேண்டாம் என்றாலும் பிரபஞ்சம் நமக்கு கொடுக்க காத்திருப்பதை நிறுத்தப்போவதில்லை.

அதில் மனிதர்களுக்கு மிகவும் கசப்பான விஷயம் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை நீங்கள் எவ்வளவு சாதுரியமாக தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் நேரம் சரி இல்லை என்றால் நீங்கள் அதை கட்டாயம் சமாளித்த ஆக வேண்டும்.

போராட்டமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சக்தி வாய்ந்த ஆலயம் | Sri Vazhakarutheeswarar Temple Temple In Tamil

அப்படியாக, மனிதர்களுக்கு பிரச்சனை என்று வந்து விட்டால், நெருங்கிய சொந்தமும் விலகி நின்றே நலம் விசாரிக்கும். ஆனால் இறைவன் மட்டும் தான் உடன் நின்று ஆறுதல் சொல்லுவார்.

அப்படியாக தீராத பிரச்சன்னை, வெளியில் சொல்ல முடியாத கவலைகள், நெருங்கிய உறவால் துன்பம் என்று சந்திப்பவர்கள் கட்டாயம் துன்ப வேளையில் செல்லும் ஆலயம் ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

வீட்டு பூஜை அறையில் பணம் வைக்கும் பழக்கம் இருக்கிறதா?

வீட்டு பூஜை அறையில் பணம் வைக்கும் பழக்கம் இருக்கிறதா?

 

சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கக்கூடிய இந்த இடத்தில் தான் இந்த கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு வழக்கறுத்தீஸ்வரர் என்ற திருநாமம். தீராத பிரச்சனை, முடிவிற்கு வராத வழக்குகள் என்று துன்பப்படுவர்கள் இங்கு சென்று ஈசனை வழிபாடு செய்ய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் இந்த வழிபாட்டை திங்கட்கிழமையில் தான் செய்யவேண்டும். இந்த கோயிலுக்கு வழிபாட்டிற்கு செல்லும் முன் முதல் நாளே ஒரு பேப்பரில் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் எழுதி கொள்ளவேண்டும்.

போராட்டமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சக்தி வாய்ந்த ஆலயம் | Sri Vazhakarutheeswarar Temple Temple In Tamil

பிறகு, திங்கட்கிழமை அன்று காலையில் அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு அந்த ஆலயம் சென்று, அந்த ஆலயத்தில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமானுக்கு முன்பாக 16 அகல்விளக்குகளில் 16 தீபங்களை ஏற்ற வேண்டும்.

முடிந்தவர்கள் அந்த 16 தீபங்களையும் மாவிளக்கு தீபமாக ஏற்றலாம். அதே போல் நம்மால் இயன்ற பூஜை பொருட்களை சிவபெருமானுக்கு வாங்கி கொடுக்கலாம். அதோடு நாம் எழுதிய அந்த பேப்பரை சிவபெருமான் காலடியில் வைத்து வழிபாடு செய்யவேண்டும்.

பிறகு சிவபெருமானை 16 முறை வலம் வந்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து வர நிச்சயம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல முடிவு கிடைக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US