கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்

By Yashini May 06, 2024 03:22 PM GMT
Report

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

தேர் திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் | Srirangam Ranganatha Temple Chariot

அதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று முடிந்தது.

இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார்.

பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் | Srirangam Ranganatha Temple Chariot

தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம், கிளி மாலை உள்ளிட்டவை பெருமாளுக்கும் தாயாருக்கும் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, ரங்கா என்ற முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை 7-ம்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.

விழாவின் நிறைவு நாளான 8-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.               

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US