ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் கோலாகலம்

By Yashini Feb 10, 2025 11:10 AM GMT
Report

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர்த்திருவிழா கடந்த ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 5ஆம் திகதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் 8ஆம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் கோலாகலம் | Srirangam Renganathar Temple Thai Month Chariot

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.

5 மணிமுதல் 5.45 மணிவரை மகர லக்னத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் கோலாகலம் | Srirangam Renganathar Temple Thai Month Chariot

பின்னர் தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக காலை 9.20 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US