வேலுண்டு வினை இல்லை.., தைப்பூச திருநாளில் முருகன் வழிபாடு
முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மிகவும் உகந்த நாளாக திகழ்வதுதான் தைப்பூச நாள்.
தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திர நாளன்று இந்த தைப்பூச திருவிழா என்பது அனைத்து முருகன் ஆலயங்களிலும் நடைபெறும்.
இந்த வருடம் தைப்பூசம் என்பது பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி வருகிறது.
தைப்பூச நாளன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் காலையில் 7:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் அல்லது 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் அல்லது மாலை 5 30 மணியிலிருந்து 7:50 மணிக்குள் இந்த தைப்பூச வழிபாட்டை செய்யலாம்.
அன்றைய தினம் வீட்டில் இருக்கக்கூடிய முருகனின் சிலை மற்றும் வேலிற்கு பால், பன்னீர், தேன் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
வீட்டில் முருகனின் சிலை, வேல் இல்லை என்பவர்கள் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக இந்த மூபொருட்களை நெய்வேத்தியமாக வைக்கலாம்.
சிறப்பான நெய்வேத்தியமாக முருகப்பெருமானுக்கு பிடித்த தேன், தினை மாவு, அவல், பொரிகடலை, சர்க்கரை பொங்கல், பாயசம், பால் சாதம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் போன்ற பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு முன்பாக குறைந்தபட்சம் ஆறு என்ற எண்ணிக்கையில் தீபம் ஏற்றுக்கொள்ளலாம்.
பிறகு சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்டி விட்டு “ஓம் சரவணபவ போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி முருகப்பெருமானுக்கு வாசனை நிறைந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அடுத்ததாக முருகனின் பாடல்களான கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், திருப்புகழ், கந்தர் அனுபூதி, சண்முக கவசம் போன்ற எதை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம்.
இவ்வாறு பாராயணம் செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூபம் ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு.
பின் அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு அன்னதானம் செய்வதும் நல்ல பலனைத் தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |