2026: தமிழ்வருடப் பிறப்பு சிறப்பாக அமைய இந்த விஷயங்களை பின்பற்றி பாருங்கள்

By Sakthi Raj Apr 14, 2026 10:20 AM GMT
Report

ஒவ்வொரு புதிய வருட பிறப்பின் பொழுது நாம் புதிதாக சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஆனால், சிந்தித்த மறுநாள் கூட நம்மால் அதை செயல்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கின்றோம். அந்த வகையில் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நாம் எந்த விஷயங்களை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பல நேரங்களில் நம்முடைய கை கால்களை கழுவி சுத்தம் செய்வது போல் நம் மனதையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. இதற்கு ஒரு சான்றாக ஒரு கதையை பார்ப்போம்.

2026: தமிழ்வருடப் பிறப்பு சிறப்பாக அமைய இந்த விஷயங்களை பின்பற்றி பாருங்கள் | Story About How To Be Happy And Positive In Life

மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் இருப்பது என்பது உண்மையா?

மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் இருப்பது என்பது உண்மையா?

ஒரு நாள் ஒரு சிறுவன் கடலில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அவனுடைய செருப்பு கடல் அலைகளோடு சென்றுவிட்டது. அப்பொழுது அவன் கடற்கரையில் எழுதுகிறான் "இந்த கடல் மாபெரும் திருடன்" என்று.

ஒருவர் சற்று தூரத்தில் அதிகமாக மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார். அங்கு அவருக்கு அவர் நினைத்ததை விடவும் அதிக அளவில் மீன்கள் வலையில் சிக்கியது. அவர் அங்கு கடற்கரையில் எழுதுகிறார் "இக்கடல் மாபெரும் கொடையாளி" என்று.

அதே கடலில் ஒருவன் நீந்தி சென்று நிலை தடுமாறி மூழ்கி விடுகிறான். கடலில் உயிரை விட்ட மகனின் மீது அதிக அன்பு கொண்ட ஒரு தாய் கடற்கரையில் எழுதுகிறாள் "இந்த கடல் மக்களை கொன்று குவிக்கும் ஒன்று" என்று.

அதே கடலில் வயது முதிர்ந்த நபர் கடலுக்குள் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வருகிறார். அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த கடற்கரையில் எழுதுகிறார். "இந்த கடல் ஒன்று போதும் நான் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து விடுவேன்" என்று.

2026: தமிழ்வருடப் பிறப்பு சிறப்பாக அமைய இந்த விஷயங்களை பின்பற்றி பாருங்கள் | Story About How To Be Happy And Positive In Life

வீடுகளில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள்

வீடுகளில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள்

இப்படியாக ஒவ்வொருவரும் கடற்கரையில் நின்று கொண்டு அவர்களுடைய அனுபவத்தை எழுதிக் கொண்டு இருக்க ஒரு பெரும் அலை ஒன்று வந்து இவர்கள் அனைவரும் எழுதிய வரிகளை அழித்துவிட்டு சென்றது.

இந்த கடைசி அலை போல் தான் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும். இங்கு ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் அவர்களுக்கு ஏற்பட்ட புரிதலையும் வைத்து நம்மிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் நாம் எதை காதில் எடுத்துக்கொள்ள வேண்டும், எதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதில்தான் நம்முடைய வாழ்க்கை அடங்கி இருக்கிறது.

ஒருவருக்கு ஒன்று அதிர்ஷ்டத்தை கொடுப்பதாகவும், மற்றொருவருக்கு இழப்புகளை கொடுப்பதாகவும் அமைகிறது. ஆகக் காலமும் சந்தர்ப்பமும் தான் யாருக்கு எதை வழங்க வேண்டும்  என்பதை தீர்மானிக்கிறது.

இதற்கிடையில் நாம் ஏதேனும் ஒரு விஷயத்தில் மட்டும் சிக்கிக் கொண்டு அதையே முழுமையாக நம்பி விடக்கூடாது. எதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து, கடைசியாக வந்த அந்த கடல் அலை போல் நாம் பல நேரங்களில் பலவற்றை எதுவும் நடக்காதது போல் கடந்து விட வேண்டிய நிலை இருக்கிறது. அப்பொழுது தான் நம்முடைய இயல்பான வாழ்க்கை அமைதியை பெறும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US