கந்த குரு கவசம் எந்த சூழலில் எழுதப்பட்டது தெரியுமா? வியப்பூட்டும் முருகரின் அருள்
கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். அப்படியாக, முருகப்பெருமாருடைய கந்த குரு கவசம் பிறந்த கதையும் அதை யாரால் எழுதப்பட்டது என்பதை பற்றியும் பார்ப்போம்.
இன்று பக்தர்களால் பாராயணம் செய்யக்கூடிய கந்த குரு கவசத்தை எழுதியவர் முருகப்பெருமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பக்தர் அவர்தான் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் ஆவார். முருகப்பெருமான் ஒருவர் வயிற்றில் கருவாக வளரும் பொழுதே இவர் தனக்கான பக்தன் என்று அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அப்படியாக, மதுரை பக்கத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி என்ற சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது. அப்படியாக கந்த குரு கவசத்தை எழுதிய சாந்தானந்த சுவாமிகள் அவருடைய தாயின் கருவில் இருக்கும் பொழுது சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவர்கள் அந்த தாயாரை தேடிச் செல்கிறார்.
அந்த தாயைப் பார்த்து உனக்கு பிறக்க இருக்கின்ற குழந்தை உனக்கான குழந்தை மட்டும் அல்ல. இந்த உலகத்திற்கான குழந்தை. இந்த உலகத்தில் பக்தியையும் வேதத்தையும் வளர்க்கக்கூடிய குழந்தையாக வளர போகிறான் என்று சுவாமிகள் சொல்லி இருக்கிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் அவன் வளரும் பொழுது சிறிது நாட்கள் மட்டுமே உங்களுடன் இருப்பான். பிறகு அவன் இந்த உலகத்தில் வேதத்தை வளர்ப்பதற்காக வெளியே சென்று விடுவான். ஆகையால் அந்த பையன் பிறக்கும் பொழுது அவனுக்கு சுப்பிரமணிய சுவாமிகள் என்று பெயரிடும்படி அந்த சித்தர் கூறுகிறார்.
அவன் வளரும் பொழுது ஒரு சரியான நேரம் வரும் போது நானே வருவேன் என்று சித்தர் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அதே போல் சாந்தானந்த சுவாமிகள் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் குழந்தையாக இருக்கிறார்.
அப்பொழுது அவர் பள்ளிக்கூட பாடத்தை படித்துக் கொண்டிருக்கும் பொழுது சுட்டுக்கோல் மாயாண்டி சுவாமி வந்து பாடப்புத்தகத்தை விடுத்து வேதங்களை படிக்க தொடங்கு என்று அவருக்கு வேத புத்தகங்களை வழங்குகிறார்.
இவ்வாறு சாதாரண சுவாமிகள் சுட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கொடுத்த அந்த வேத புத்தகங்களை படிக்க துவங்கிய பொழுது அவருக்கு ஒரு தேடல் பிறக்கிறது. ஆக, அந்த தேடலை நோக்கி சந்தானந்த சுவாமிகள் பயணத்தை தொடங்குகிறார் சுவாமிகள்.
அப்படியாக, சந்தானந்தஸ்வாமி எப்படி கந்தகுரு கவசத்தை எப்படி எழுதினார் என்ற கதையை இந்த காணொளிகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |