வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலக செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு
நாம் சிலர் குடும்பங்களில் பார்த்து இருப்போம்.எந்த காரியம் எடுத்தாலும் தடங்கல்,தடைகள் என்று மாறி மாறி வந்து கொண்டு இருக்கும்.எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் சந்தோஷமாக நடைபெறாது இதற்கெல்லாம் காரணம் அவர்கள் வீட்டில் கவனிக்காமல் விட்ட ஏதோ தோஷங்களே ஆகும்.பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையாது.ஏன் படிப்பில் கூட பிள்ளைகளுக்கு ஒரு விதமான வளர்ச்சி குறைபாடாகவே இருக்கும்.
இவ்வாறு நடக்க நாம் மனம் வருந்தி அமர்வதை தாண்டி இறைவழிபாடு செய்ய நமக்கான மாற்றத்தை பெறலாம்.அப்படியாக சுபநிகழ்ச்சி தடங்கல் ஏற்படாமல் இருக்கவும் நாம் அதில் இருந்து விடுபடவும் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
இறைவழிபாட்டை பொறுத்தவரையில் முழுமையாக இறைவனை நம்ப வேண்டும் சரண் அடைந்திட வேண்டும்.மனதில் இம்மி அளவும் சந்தேகம் இருக்கக்கூடாது.அப்பொழுது தான் நாம் அவன் நடத்தும் அதிசயத்தை பார்க்க முடியும்.
அப்படியாக வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலக நம்முடைய குறைகள் தீர 27 வாரம் தொடர்ந்து துர்கை அம்மன் வழிபாடு செய்ய வேண்டும்.இந்த பரிகாரத்தை செய்ய செவ்வாய் கிழமை துர்கை அம்மன் ஆலயம் சென்று ஒரு எலுமிச்சம்பழம் வாங்கி கொடுத்து, ஒரு மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
சிலர் வீட்டில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றக்கூடிய வழக்கம் வைத்திருப்பார்கள்.உங்கள் வீட்டில் அதை கடைபிடித்தால் அவ்வாறே செய்யலாம்.நீங்கள் எந்த விளக்கு ஏற்றினாலும் ஒரு எழுமிச்சை பழம் வாங்கி கொடுத்து அம்பாள் பாதத்தில் வைத்து உங்கள் கஷ்டங்கள் மனதார விலகவேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 27 வாரம் செய்ய நிச்சயம் உங்கள் வீட்டில் நடக்கும் மாற்றங்களை பார்க்க முடியும்.மேலும் வீட்டிற்கு எடுத்து வந்த எழுமிச்சை பழத்தை வீட்டில் உள்ளவர்கள் உபயோகித்து பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்ய நம்மில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் முற்றிலுமாக விலகும்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் பெருகும்.பிறகு சுபநிகழ்ச்சிகள் எந்த தடங்கலும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுவதை காணாலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |