இன்றைய ராசி பலன்(24.01.2025)
மேஷம்:
இன்றைய நாளில் பயணத்தில் கவனமாக இருக்கவேண்டும்.வேலை பளு அதிகரிக்கும்.உங்களுக்கான மன குழப்பம் அகலும்.நேற்றைய தினம் சந்தித்த பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம்:
உங்கள் வியாபாரத்தில் நீங்கள் அதிக லாபம் பெருவீர்கள்.குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் தீரும்.மறைமுக தொல்லைகள் விலகுவார்கள்.நினைத்ததை சாதிப்பீர்கள்.
மிதுனம்:
உங்கள் செயலில் சிறு சிறு மாற்றம் நிகழும்.எதையும் தீர ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.குடும்பத்தில் சில குழப்பங்கள் தீரும்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
கடகம்:
உறவினருடன் உண்டான மனக்குழப்பங்கள் அகலும்.பூர்வீக சொத்து விவகாரத்தை பேசி முடிப்பீர்கள்.திட்டமிட்ட வேலைகள் தடையின்றி நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.
சிம்மம்:
தாய் வழி உறவில் உண்டான சிக்கல் தீரும்.கணவன் மனைவி இடையே இணைப்பு அதிகமாகும்.வெளியூர் பயணம் லாபம் கொடுக்கும்.வேலை பளு அதிகரிக்கும்.நிதானம் அவசியம்.
கன்னி:
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும்.புதிய முயற்சியில் லாபம் காண்பீர். உங்கள் திறமை வெளிப்படும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.
துலாம்:
எதையும் பொறுமையாக கையாள வேண்டிய நாள்.குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதம் உண்டாகலாம்.நீண்ட நாள் மன குழப்பம் கொடுத்த பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.
விருச்சிகம்:
வேலைபளு அதிகரிக்கும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னைகள் உண்டாகும்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.
தனுசு:
காணாமல் போன பொருள் கிடைக்கும்.ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.எதிர்பாராத பயணம் அலைச்சல் ஏற்படும்.உடல் சோர்வுடன் காணப்படுவீர்கள்.வரவு செலவில் கவனம் தேவை.
மகரம்:
நேற்றைய நெருக்கடிகள் நீங்கும். செயல்கள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.நண்பர்கள் ஆதரவால் உங்களுக்கு இருந்த பிரச்னைள் விலகும். பண வரவு அதிகரிக்கும்.
கும்பம்:
வழிபாட்டில் பங்கேற்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மீனம்:
குடும்பத்தில் சில தவிர்க்க முடியாத நெருக்கடிகள் உருவாகும்.சிலர் இறைவழிபாட்டில் முழு கவனம் செலுத்துவார்கள்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.நிதானம் தேவை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |