கணவரால் கைவிடப்படட்ட பெண் எந்த வீட்டு குலதெய்வத்தை வழிபட வேண்டும்
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள்.இருந்தாலும் அந்த உறவில் சில விரிசல் விழுவதை நாம் பார்க்க முடியும்.அப்படியாக இந்த திருமணத்தில் ஒரு பெண்ணிற்கு தான் நிறைய மாறுதல்கள் நிகழ்கிறது.
அதாவது பிறந்த வீட்டில் ஒரு குலதெய்வம்,திருமணம் ஆன பிறகு வேறொரு குலதெய்வம் என்று மாற்றங்கள் நடக்கிறது.அப்படியாக அந்த திருமண பந்தத்தில் ஏதேனும் கால சூழ்நிலையால் பிரிந்த தம்பதியினர் அல்லது கணவனை இழந்த பெண் அந்த பிரிவிற்கு பிறகு எந்த வீட்டு குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று சந்தேகம் இருக்கும்.அதை பற்றி பார்ப்போம்.
திருமணம் ஆகி குழந்தைகள் உடன் பிரிந்த மனைவி அல்லது கணவனை இழந்த மனைவி அவளின் புகுந்த வீட்டு குலதெய்வத்தை கட்டாயமாக வழிபட வேண்டும்.ஒரு பொழுதும் மறத்தல் கூடாது.
மேலும்,அவ்வாறு வழிபடும் பொழுது அந்த வீட்டு தெய்வம் நிச்சயம் அவர்கள் துணை நின்று அவர்களின் குழந்தையையும் அவளையும் காப்பாற்றும்.அதோடு அந்த பெண் அவளின் பிறந்த வீட்டு குலதெய்வ வழிபாடும் செய்யலாம்.
அவ்வாறு வழிபடும் பொழுது அவளின் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.பிரிந்து விட்டோம்,கணவனை இழந்து விட்டோம் என்று வெறுமையில் வாடாமல் அவர்கள் வீட்டு குலதெய்வம் வழிபாடு செய்ய நிச்சயம் நமக்கான பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |