ஏழரை சனியால் துன்பமா?இந்த பரிகாரங்கள் செய்யுங்கள்
நம்முடைய இந்து மதத்தில் ஜோதிடம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.அதிலும் ஒருவரின் வாழ்க்கையில் நவகிரகம் மிக பெரிய பங்கு வகிக்கிறது.அதாவது ஒன்பது கிரகங்கள் மாறும் பொழுது ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்களை சந்திகைகூடும்.
அதிலும் சனி திசை,ஏழரை சனி நடக்கும் காலத்தில் அவர்கள் மிகவும் அவதிக்குள்ளாவார்கள்.காரணம் சனி பகவான் வலிமையானவராகவும் இவர் நீதியின் கடவுளாகவும் கருதப்படுகிறார்.அதனால் தான் மனிதர்கள் அவருக்கு மிகவும் பயம் கொள்கிறார்கள்.
அதாவது ஏதோ ஒரு காலகட்டத்தில் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கு சனிபகவான் இரக்கம் இல்லாமல் தண்டித்து நம்முடைய தவறை புரிய வைப்பார்.மேலும் இவர் சூரியனின் மகனாவார்.பொதுவாக தந்தையும் மகனும் ஒற்றுமையாக இருப்பார்கள்.ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்.
அவ்வாறாக சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் ஆவார்.இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.இந்த சனி பகவான் ஆனவர் ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அர்த்தநாதீஸ்வரராக திகழ்கிறார்.
மேலும்,ஒருவருக்கு சனிதிசை அஷ்டம சனி காலங்களில் பல துன்பங்களை சந்திக்ககூடும்.அதிலும் ஏழரை சனியால் பல பாதிப்புகள்உருவாகிறது.அவ்வாறு ஏழரை சனி காலங்களில் நாம் சனியின் அருளை பெற செய்யவேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே சனிபகவான் ஒரு ஸ்தோத்திரப் பிரியர்.ஆக ஒருவருக்கு சனி தோஷம் ஏற்பட்டால் அந்த தோஷம் விலக சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம்.
சனி பகவானுக்கு எந்த ஒரு மனிதன் பிறர் துன்பம் அறிந்து உதவி செய்கிறாரோ அவர்களை மிகவும் பிடிக்கும்.ஆக நாம் இயல்பாகவே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டு வர நமக்கு எந்த ஒரு கிரக பாதிப்பும் ஏற்படுவதில்லை.
மேலும்,ஏழரை சனி காலத்தில் கட்டாயம் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும்.திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் விலக செய்யும்.
சனிபகவானின் வாகனமாக காக்கைக்கு நாம் தானியம் வழங்கலாம்.அது நம் வாழ்க்கையில் மிக பெரிய சிறந்த பலனை வழங்கும்.அதோடு மிக முக்கியமாக கோயில்களில் நாம் நவகிரகங்களை பயபக்தியோடு வணங்க வேண்டும்.ஒருவருக்கு சனிக்கிழமை காலை சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமன் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். அப்படி செய்தால் சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
சனி தாக்கம் குறைய சொல்ல வேண்டிய மந்திரம்:
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ"
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்!!
ஆக வழிபாட்டிற்கு மிஞ்சிய பரிகாரமும் இல்லை.மந்திரத்திற்கு மிஞ்சிய துணையும் இல்லை.எந்த சூழ்நிலையும் நாம் மனதார இறைவழிபாடு செய்து பிராத்தனை செய்ய நம்முடைய கஷ்டங்களும் தோஷங்களும் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |