ஜாதகத்தில் சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால் நீங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிர பகவான் ஒருவருக்கு உச்சம் ஆட்சி பெற்று அமைந்திருந்தால் அவர்கள் இந்த உலகில் பலரும் போற்றும் வகையில் பிரபலமான நபராக இருப்பார்கள். அப்படியாக உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து சுக்கிர பகவான் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார் அந்த வீட்டின் பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
1. சுக்கிரன் உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் நீங்கள் மிகப்பெரிய செல்வம் உடையவராக இருப்பீர்கள். இது ஒரு மிகச்சிறந்த அமைப்பாகும்.
2. சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்றால் நல்ல குடும்பங்கள் அமையப்பெற்று நிம்மதியான வாழ்க்கையோடு செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வீர்கள்.
3. சுக்கிரன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் என்றால் எப்பொழுதும் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். சகோதரர் வழியே நல்ல ஆதாயம் கிடைக்கும்.
4. சுக்கிரன் நான்காம் இடத்தில் இருக்கிறார் என்றால் இந்த ஜாதகர் சொன்ன சொல்லை காப்பாற்றக்கூடிய நபராக இருப்பார்.
5. சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் என்றால் புத்தி கூர்மை அதிகம் இருக்கும். சமுதாயத்தில் ஒரு மிகச்சிறந்த மனிதராக இவர் இருப்பார்.
6. சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருக்கிறார் என்றால் இவர்கள் வாக்கில் சில தடுமாற்றம் உண்டாகும். பணம் சேமிப்பதில் சில சிக்கல்களை சந்திப்பார்கள்.
7. சுக்கிரன் ஏழாம் இடத்தில் இருக்கிறார் என்றால் இவர்களுக்கு திருமணத்தில் சில தடைகள் உண்டாகும். ஆனால் ஞான உடையவராக இருப்பார்.
8. சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருக்கிறார் என்றால் தேவையில்லாத பண செலவுகள் உண்டாகும்.
9. சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் என்றால் பூர்வீக சொத்துக்கள் இவர்களுக்கு சேரும். செல்வம் பாக்கியம் அனைத்தும் பெற்று வாழ்வார்கள்.
10. சுக்கிரன் பத்தாம் இடத்தில் இருக்கிறார் என்றால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பேச்சுத் திறமையால் பிரபலமாகும் திறன் பெற்று இருப்பார்கள்.
11. சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார் என்றால் செல்வம் உடையவராக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் இவர்களிடையே அதிகம் காணப்படும்.
12. சுக்கிரன் 12ஆம் இடத்தில் இருக்கிறார் என்றால் வீண் செலவுகள் உண்டாகும். பேச்சு திறமை இருந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லாமல் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







