மனிதர்களைத் துன்பம் ஏன் துரத்துகிறது? சீதை சொன்ன நீதி
மனிதர்களுக்கு துன்பம் வருவது என்பது பல வேலைகளில் நம் வினை பயன் வழியாக தான் என்பதை புராண காலத்தில் இருந்து பல நிகழ்வுகள் கொண்டு தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படியாக மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது. அந்த துன்பத்திலிருந்து நாம் எவ்வாறு விடுதலை பெறுவது என்பதை பற்றி ராமாயணத்தில் சீதாதேவி நமக்கு சில விஷயங்களை சொல்கிறார் அதை பற்றி பார்ப்போம்.
ராமாயணத்தில் சீதாதேவிக்கு நடக்காத துன்பமே இல்லை. ஏன் ஒரு முறை அசோகவனத்தில் சீதை இருந்தபொழுது அரக்கியர்கள் பலரும் அவரை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆனால் சீதை அவர்களிடம் ஒரு பொழுதும் கோபம் கொள்ள வில்லை. மிகப் பொறுமையாக அதை சமாளித்து நடக்கின்ற துன்பம் தன்னுடைய வினை பயனால் என்று உறுதியாக நம்பினாள்.
அதோடு ராவணனை சம்ஹாரம் செய்த பிறகு அசோகவனத்தில் இருக்கக்கூடிய சீதா தேவியிடம் நடந்த விவரங்களை கூற வந்த அனுமன் சீதா தேவியை வணங்கி தாயே ஸ்ரீராமபிரான் வெற்றிவாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டு விட்டான் என்று கூறினார்.
அனுமன் கூறியதை கேட்டு மிகவும் மன மகிழ்ச்சியடைந்த சீதை. அனுமனே நான் முன்பொருமுறை என் உயிர் துறக்க நினைத்த நேரத்தில் நீதான் வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றி செய்தியை வந்து எனக்கு தெரிவிக்கிறார். ஏற்கனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை தந்து விட்டேன்.
முன்பை விடவும் அதிக சந்தோஷம் செய்தியை இப்போது எனக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றாய். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றார் சீதாதேவி. அதற்கு அனுமன் தாயே எனக்கு ஒரு வரமும் வேண்டாம் நான் விரும்புவது ஒன்றை மட்டும்தான் கடந்த பல மாதங்களாக உங்களை மிகவும் துன்புறுத்திய அந்த அரக்கிகளை நான் தீயிட்டு எரிக்க வேண்டும்.
அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும் என்று அனுமன் கேட்டுக்கொண்டார். ஆனால் அனுமன் கேட்ட கோரிக்கைக்கு சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனை பார்த்து சீதை சொல்கிறார், அனுமன் என்னை அவர்கள் துன்புறுத்தி இருந்தாலும் அவர்களை தண்டிப்பதற்கு எனக்கு மனம் இல்லை. நான் அனுபவித்ததற்கு காரணம் என்னுடைய முன்வினையே ஆகும்.
ஆக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு அதை பிடித்து வர என் கணவரை அனுப்பியதும் சென்ற கணவர் நீண்ட நேரம் ஆகி திரும்பி வராமல் எனக்காக காவலாக இருந்த லட்சுமனை ராமனுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க சொல்லி அனுப்பியதும் நான் தான்.
என் கணவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு இருக்காது என்று மறுத்துக் கூறிய லட்சுமன் கடும் சொற்களால் திட்டி எந்த ஒரு பாவமும் அறியாது இரவு பகலமாக காத்த லட்சுமன் மனம் நோகும்படி பேசியதற்கு காரணம் நான் தான். அது தான் நான் இங்கே துன்பத்திற்கு ஆளாகி நிற்பதற்கான முக்கிய காரணமாகும்.
அதனால் அரக்கிகளை நீ திட்டாதே அவர்கள் அரக்கியாக இருந்தாலும் பெண்கள். அதனால் அந்த பாவத்தை நீ பெற்றுக் கொள்ளாதே என்று அனுமனிடம் கூறினார். ஆக நாம் அனுபவிக்க வேண்டியது விதியாக இருந்தாலும் அந்த விதியை நம் வெல்லக்கூடிய ஒரு நொடிப்பொழுது இந்த இயற்கை நமக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய கர்ம வினை உள்ளது. ஆக விதி நமக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கட்டும் நாம் எப்பொழுதும் யாரிடமும் கடிந்து நடந்து கொள்ளாமல் அனைவரையும் சமமாக பார்த்து நல்ல அன்பாக பழகி நல்ல வாழ்வை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







