சுக்கிர பெயர்ச்சி 2025: எந்த ராசிகளுக்கு சாதகமாக உள்ளது?
ஜோதிடத்தில் நவகிரகம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதில் சுக்கிரன் தான் ஒருவர் ஜாதகத்தில் செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம் மற்றும் செழிப்பு போன்றவற்றின் காரணியாக விளங்குகிறார்.
அப்படியாக, சுக்கிர பகவான் வருகின்ற மே மே 31, 2025 அன்று மேஷ ராசிக்குள் நுழைய உள்ளார். ஜோதிடத்தில் இந்த சுக்கிரனின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, சுக்கிரனின் இந்த இடமாற்றம் எந்த ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு இந்த சுக்கிரனின் இடமாற்றம் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளை கொடுக்கும். வியாபாரத்திற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உண்டாகும். காதல் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். சிலருக்கு இடம் மாறுதல் போன்ற விஷயங்கள் நடக்கும். பொருளாதாரம் சீராகும்.
கன்னி:
கன்னி ராசிக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சாதகமாக அமைய போகிறது. பணம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சிலருக்கு சொந்த வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகி செல்லும். வெளியூர் சென்று வேலை பார்க்கும் யோகம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் வழங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வாங்கிய கடனை அடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு உடல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |