அடுத்த 2 மாதத்திற்கு அதிர்ஷ்டத்தை கொட்டிக்கொடுக்க போகும் சுக்கிரன்- எந்த ராசிகளுக்கு தெரியுமா?

By Sakthi Raj Jun 25, 2025 10:08 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் மாற்றங்களும் ஒவ்வொரு ராசிகளுக்கு ஒருவித தாக்கத்தை கொடுக்கும். அந்த வகையில் ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மிகவும் சிறந்த நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் செல்வ செழிப்போடு வாழ்வார்.

காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை இவை எல்லாம் மிக சிறப்பாக அமையும். அதுவே சுக்கிரன் சற்று பலம் இழந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் துன்பத்தை அனுபவிக்கவேண்டிய நிலை வரும். அந்த வகையில் ஜூலையில், செல்வத்தை அளிக்கும் சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைய உள்ளார்.

இவர் அடுத்த 26 நாட்களுக்கு இங்கு முழுமையாகப் பெயர்ச்சி அடைவார். இவருடைய இந்த பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் எந்த ராசியினர் அதிக அளவில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

அடுத்த 2 மாதத்திற்கு அதிர்ஷ்டத்தை கொட்டிக்கொடுக்க போகும் சுக்கிரன்- எந்த ராசிகளுக்கு தெரியுமா? | Sukiran Peyarchi July Month Prediction In Tamil

மிதுனம்:

சுக்கிரன் பெயர்ச்சி இவர்களை மிக பெரிய செல்வந்தர்களாக்கும். இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு நல்ல எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். காதல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இனிமையான காலம் ஆகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்கள் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.

லக்னத்தில் கேது உள்ளவர்களை எப்பொழுதும் கடவுள் கைவிடுவதில்லை- காரணம் தெரியுமா?

லக்னத்தில் கேது உள்ளவர்களை எப்பொழுதும் கடவுள் கைவிடுவதில்லை- காரணம் தெரியுமா?

துலாம்:

துலாம் ராசிக்கு இந்த சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையப்போகிறது. நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார மாற்றம் சிறப்பாக அமையும். திடீர் அதிர்ஷ்டம் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகிறது.

கும்பம்:

கும்ப ராசியினர் இந்த காலகட்டத்தில் அதிக அளவிலான நன்மைகளை பெறப்போகிறார்கள். திருமண வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்கள் போட்டி தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும்.         

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US