சுக்கிர பகவானின் 108 போற்றிகள்
நவகிரகங்களின் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான்.
இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், மகிழ்ச்சி, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
செல்வவளம் மிளிர, நல்ல வாழ்க்கைத்துணை அமைய, உயர் பதவிகள் கிடைக்க, தொழிலில் மேன்மை உண்டாக சுக்கிர பகவானின் 108 போற்றிகளை சொல்லவேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி இந்த 108 போற்றியைச் சொல்ல அனைத்து நலங்களும் வளங்களும் நிறையும்.
சுக்கிர பகவானின் 108 போற்றிகள்
1.ஓம் அசுர குருவே போற்றி
2.ஓம் அரியசக்தி வாய்ந்தவனே போற்றி
3.ஓம் அழகனே போற்றி
4.ஓம் அரங்கத்து அருள்பவனே போற்றி
5.ஓம் அந்தணனே போற்றி
6.ஓம் அத்தி சமித்தனே போற்றி
7.ஓம் அவுணர் அமைச்சனே போற்றி
8.ஓம் அந்தகனுக்கு உதவியவனே போற்றி
9.ஓம் ஆறாம் கிரகனே போற்றி
10.ஓம் ஆச்சாரியனே போற்றி
11.ஓம் இருகரனே போற்றி
12.ஓம் இனிப்புச் சுவையனே போற்றி
13.ஓம் இந்திரியமானவனே போற்றி
14.ஓம் இல்லறக் காவலே போற்றி
15.ஓம் இரு பிறையுளானே போற்றி
16.ஓம் ஈர்க்கும் மீனே போற்றி
17.ஒம் உல்லாசனே போற்றி
18.ஓம் உற்றோர்க் காவலே போற்றி
19.ஓம் ஒரு கண்ணனே போற்றி
20.ஓம் ஒளி மிக்கவனே போற்றி
21.ஓம் கசன் குருவே போற்றி
22.ஓம் கசனால் மீண்டவனே போற்றி
23.ஓம் கலை நாயகனே போற்றி
24.ஓம் கலைவளர்ப்போனே போற்றி
25.ஓம் கருடவாகனனே போற்றி
26.ஓம் கமண்டலதாரியே போற்றி
27.ஓம் களத்ர காரகனே போற்றி
28.ஓம் கயமுகன் தந்தையே போற்றி
29.ஓம் காவியனே போற்றி
30.ஓம் கனகம் ஈவோனே போற்றி
31.ஓம் கீழ்திசையனே போற்றி
32.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
33.ஓம் கிரகாதிபனே போற்றி
34.ஓம் சடை முடியனே போற்றி
35.ஓம் சங்கடம் தீர்ப்போனே போற்றி
36.ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி
37.ஓம் சந்திரன் ஆகானே போற்றி
38.ஓம் சத்ரு நாசகனே போற்றி
39.ஓம் சிவனடியானே போற்றி
40.ஓம் சிவன் உதரத்து இருந்தவனே
41.ஓம் சுக்கிரனே போற்றி
42.ஓம் சுந்தரனே போற்றி
43.ஓம் "சுக்கிர நீதி' அருளியவனே போற்றி
44.ஓம் சுரர்ப் பகைவனே போற்றி
45.ஓம் சுகப்பிரியனே போற்றி
46.ஓம் செழிப்பிப்பவனே போற்றி
47.ஓம் தவயோகனே போற்றி
48.ஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றி
49.ஓம் திங்கள் பகையே போற்றி
50.ஓம் திருவெள்ளியங்குடித் தே
51.ஓம் துலாராசி அதிபதியே போற்றி
52.ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி
53.ஓம் தேவயானி தந்தையே போற்றி
54.ஓம் தூமகேதுக்கு அருளியவனே போற்றி
55.ஓம் நாரடப்படுபவனே போற்றி
56.ஓம் நாடளிப்பவனே போற்றி
57.ஓம் நாற்கரனே போற்றி
58.ஓம் நீண்ட தசாகாலனே போற்றி
59.ஓம் நுண்கலைத் தேவனே போற்றி
60.ஓம் நெடியவனே போற்றி
61.ஓம் பரணி நாதனே போற்றி
62.ஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றி
63.ஓம் பத்துபரித்தேரனே போற்றி
64.ஓம் பஞ்சகோணப்பீடனே போற்றி
65.ஓம் பிரகாசிப்பவனே போற்றி
66.ஓம் பிருகு குமாரனே போற்றி
67.ஓம் பின்னும் சுழல்வோனே போற்றி
68.ஓம் பிள்ளை நான்குடையவனே போற்றி
69.ஓம் புதன் மித்ரனே போற்றி
70.ஓம் புகழளிப்பவனே போ
71.ஓம் புதனருகிலிருப்பவனே போற்றி
72.ஓம் பூமியன்ன கோளே போற்றி
73.ஓம் பூரத்ததிபதியே போற்றி
74.ஓம் பூராட நாதனே போற்றி
75.ஓம் பெண்பால் கிரகமே போற்றி
76.ஓம் பேராற்றலானே போற்றி
77.ஓம் மழைக் கோளே போற்றி
78.ஓம் மலடு நீக்கியே போற்றி
79.ஓம் மரவுரி ஆடையனே போற்றி
80.ஓம் மாமேதையே போற்றி
81.ஓம் மாண்டு மீண்டவனே போற்றி
82.ஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றி
83.ஓம் மாவலியின் குருவே போற்றி
84.ஓம் மாலோடு இணைந்து அருள்பவனே போற்றி
85.ஓம் மீனத்தில் உச்சனே போற்றி
86.ஓம் மிருத்யு நாசகனே போற்றி
87.ஓம் மோகனனே போற்றி
88.ஓம் மொச்சைப் பிரியனே போற்றி
89.ஓம் யயாதி மாமனே போற்றி
90.ஓம் எம பயம் அழிப்பவனே போற்றி
91.ஓம் ரவிப் பகைவனே போற்றி
92.ஓம் ரிஷப ராசி அதிபதியே போற்றி
93.ஓம் வண்டானவனே போற்றி
94.ஓம் வரத ஹஸ்தனே போற்றி
95.ஓம் வள்ளி அதிதேவதையனே போற்றி
96.ஓம் வாமனரை உணர்ந்தவனே போற்றி
97.ஓம் விடிவெள்ளியே போற்றி
98.ஓம் "விபுதை'ப் பிரியனே போற்றி
99.ஓம் வெண்ணிறனே போற்றி
100.ஓம் வெள்ளி உலோகனே போற்றி
101.ஓம் வெண் குடையனே போற்றி
102.ஓம் வெள்ளாடையனே போற்றி
103.ஓம் வெண் கொடியனே போற்றி
104.ஓம் வெள்ளித் தேரனே போற்றி
105.ஓம் வெண்டாமரைப் பிரியனே போற்றி
106.ஓம் வைரம் விரும்பியே போற்றி
107.ஓம் "ஹ்ரீம்' பீஜ மந்திரனே போற்றி
108.ஓம் வெள்ளி நாயகனே போற்றி போற்றி
எங்களுக்கு நாளும் வாழ வளம் தந்தருளும் அருள்மிகு ஸ்ரீசுக்கிர பகவானின் திருவடிகளே சரணம்...
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |