சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை
சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படுகையில் உண்டாகும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். தொடர்ந்து, ஏப்ரல் 01 ஆம் தேதி சுக்கிரன் எதிரி கிரகமான குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
இந்த பூரட்டாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் ரீதியாக, பல புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். ணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மகரம்
தொழில் ரீதியாக, நிறைய நன்மைகளைப் பெறக்கூடும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.