தீர்க்கசுமங்கலி வரம் அருளும் சக்தி வாய்ந்த மந்திரம்
நம் வாழ்க்கையில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமான அற்புதமான உறவாகும். அதாவது எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து விதியின் சேர்க்கையால் கணவன் மனைவியாக இணைந்து வாழ்க்கையை சரிபாதியாக பகிர்ந்து வாழும் இந்த வாழ்க்கை பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது.
அந்த வகையில் கணவன் மனைவிக்காக பிரார்த்தனை செய்து கொள்வதும் மனைவி கணவனுடைய உடல் நலம் ஆரோக்கியம் அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டுவதும் இயல்பான ஒரு விஷயம்.
அப்படியாக பெண்கள் குடும்ப நலன் சிறப்பாக அமையவும் கணவனுடைய ஆயுள் பொருளாதாரம் அனைத்தும் பலம் பெறவும் பல வழிபாடுகளை செய்வார்கள்.
மேலும் பெண்கள் தங்களுடைய குடும்ப நலனுக்காக இருக்கும் விரதங்கள் பல உள்ளது. அப்படியாக பெண்கள் ஒவ்வொரு விரதத்தையும் முறையாக கடைபிடித்து இருக்கும் பொழுது அவர்கள் குடும்பம் மிகச் சிறந்த உயரத்தை அடைவதை நாம் பார்க்க முடியும்.
அந்த வகையில் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ சொல்ல வேண்டிய மந்திரங்கள் இருக்கிறது. இந்த மந்திரத்தை அவர்கள் தினமும் மனதார வழிபாடு செய்து பாராயணம் செய்து வருவது அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்கும்.
சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
அவைதவ்யம் ஸௌபாக்யம்
தேஹித்வம் மம ஸுவ்ருதே, புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
ஸௌமங்கல்யம் ச தேஹிமே.
சத்யவான் மனைவி சாவித்திரியால் அருளப்பட்ட இந்த மந்திரத்தை பெண்கள் காரடையான் நோன்பு இருக்கும் வேலைகளில் பாராயணம் செய்யலாம், அதை தவிர்த்து தினமும் பாராயணம் செய்யலாம். அது முடியாதவர்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமையில் பாராயணம் செய்வது அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி வரத்தையும் குடும்பத்தில் நல்ல பொருளாதார நிலையையும் பெற்றுக் கொடுக்கும்.
இந்த மந்திரத்தை வெறும் மந்திரமாக சொல்லாமல் மனதார உணர்ந்து தன்னுடைய வேண்டுதல் நிறைவேற சொல்லும் பொழுது முகத்தில் பொலிவும் மனது நேர்மறையான சக்தியும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அதுமட்டுமில்லாமல் வருகின்ற துன்பத்தை மன உறுதியோடு போராடக் கூடிய தைரியமும் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







