இன்றைய ராசி பலன்(03-09-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் மதியம் மேல் சில சங்கடமான சூழ்நிலை உருவாகலாம். அமைதி காத்து செயல்படுவதால் நன்மை உண்டாகும். உங்கள் ரகசியத்தை பாதுகாத்து கொள்வது நல்லது.

ரிஷபம்:

உங்களை சிலர் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்யலாம். வண்டி வாகனத்தில் பயணம் செல்லும் பொழுது கவனம் அவசியம். வேடிக்கையாக செய்யக்கூடிய விஷயம் சில பாதிப்புகளை கொடுக்கலாம்.

மிதுனம்:

உங்களுக்கு எதிர்காலம் மீது பயம் உண்டாகும். வேலையை தக்க வைத்து கொள்ள எச்சரிக்கையாக செயல்படவேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வரலாம். கவனம் தேவை.

கடகம்:

உங்களுக்கு நெருங்கியவர்களின் உதவிகள் கிடைக்கும். அண்ணன் தங்கை உறவால் ஏற்பட்ட சிக்கல் விலகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு சாதகமான நாள்.

2025 செப்டம்பர்: இந்த 3 ராசியினர் காதலில் வெற்றி பெறுவார்களாம்

2025 செப்டம்பர்: இந்த 3 ராசியினர் காதலில் வெற்றி பெறுவார்களாம்

சிம்மம்:

வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சனை இன்னும் அதிகம் ஆகும். மனைவி வழியே உங்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு தொந்தரவுகளை சந்திப்பீர்கள்.

கன்னி:

உங்கள் வீடுகளில் சில சங்கடமான சூழ்நிலை உருவாகும். பிறரிடம் ஆலோசனை கேட்டு செய்வதை விட சுயமாக முடிவு எடுப்பது மகிழ்ச்சி கொடுக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்:

வெளிநாடு செல்ல முயற்சி செய்பவருக்கு நல்ல வேலை கிடைக்கம். வங்கியில் புதிய கணக்கை தொடங்குவீர்கள். மனதில் உள்ள பாரம் குறையும். உங்களுக்கு ஆதரவாக சக நண்பர்கள் இருப்பார்கள்.

விருச்சிகம்:

இன்று நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் பிடிவாத குணத்தை விட்டால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கான வேலையை வெகு விரைவாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு:

நீண்ட நாட்களாக மனதில் உள்ள சங்கடங்கள் விலகும். உங்களை வெறுத்து விலகியவர்கள் முன்னிலையில் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவை கொடுப்பார்கள்.

மகரம்:

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள்வது அவசியம். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது மகிழ்ச்சி கொடுக்கும். உடல் சோர்வு விலகும். நன்மையான நாள்.

கும்பம்:

இன்று உங்கள் பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வாங்கிய கடனை அடைக்கும் நிலை உண்டாகும். வியாபாரத்தை புதிய இடத்திற்கு மாற்றும் நிலை உண்டாகும். நிம்மதியான நாள்.

மீனம்:

நீங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீண்ட நாளாக மனதில் உள்ள ஆசை நிறைவேறும். விலகி சென்ற சொந்தம் மீண்டும் உங்களை வந்து சந்திப்பார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US