இன்று ராகுகால வேளையில் சிவனை வழிபட்டால் தோஷம் விலகும்

By Sakthi Raj Sep 15, 2024 05:29 AM GMT
Report

பிரதோஷம் என்றாலே சிவனுக்கு உரிய முக்கிய விஷேச நிகழ்வாகும்.அப்படியாக இன்று ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. பொதுவாக ஞாயிற்று கிழமை பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம்.

இன்று பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான்.

இன்று ராகுகால வேளையில் சிவனை வழிபட்டால் தோஷம் விலகும் | Sunday Sivan Prathosha Valipadu

அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை.இந்த நேரங்களில் சிவனை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறலாம்.

எல்லாம் சிவன் கோயில்களிலும் பிரதோஷ பூஜை மிக சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம்.பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

உலகத்தின் விஷேசமான மூன்று செல்வங்களை பெற இதை கடைபிடியுங்கள்

உலகத்தின் விஷேசமான மூன்று செல்வங்களை பெற இதை கடைபிடியுங்கள்


குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.அப்போது, 16 வகையான பொருட்களால் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும்.

இன்று ராகுகால வேளையில் சிவனை வழிபட்டால் தோஷம் விலகும் | Sunday Sivan Prathosha Valipadu

நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும். ஆதலால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள்.

நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.

பிரதோஷம் தரிசனம் செய்வது மிக பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.ஆதலால் குடும்பத்துடன் சென்று சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபட்டு வர வாழ்க்கையில் நீண்ட நாள் இருந்த துன்பம் விலகி சந்தோசம் நிலைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US