ராஜயோகம்: பணமழை கொட்டப்போகும் ராசியினர் இவங்க தான்
சூரிய பகவான் தற்பொழுது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். அவர் ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார்.
அன்றைய நாள் தான் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதே நாள் தான் சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார்.
அப்படியாக சூரிய பகவானின் இந்த அஸ்வினி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கு பல விதமான தாக்கம் உண்டாக்கும்.
இருந்தாலும் அவை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய ராஜ யோகத்தை கொடுக்க உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு சூரியனின் இட மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்க உள்ளது. அதாவது அவர்கள் வாழ்க்கையில் நினைத்த காரியத்தை சாதிப்பார்கள். உடல் ஆரோக்கியம் நல்ல சீராகும். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெற்று கொடுக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு சூரியனின் இட மாற்றம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தெளிந்த மனதுடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு சூரியனின் இந்த இட மாற்றம் மனதில் தெம்பும் தைரியமும் கொடுக்கும். இந்த காலத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நீண்ட காலமாக கைக்கு வரவேண்டிய பணம் உங்களை வந்து சேரும். உங்களின் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். இறை வழிபாடு மேலோங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |