சக்தி வாய்ந்த சூரியபகவான் வழிபாடு
பிறந்த இந்த வாழ்வை வாழ்ந்து அனுபவிக்க தானே ஆசை. அப்படியாக, நம் எல்லோருக்கும் நல்லபடியாக செல்வ வளமும் உடல் வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான் எண்ணமாக இருக்கும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழியாக இருக்கிறது. அதாவது பெரிய செல்வந்தராக இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் அதனால் பயனில்லாமல் போய்விடும்.
சுவரை வைத்து தானே சித்திரம் வரையமுடியும் என்பார்கள். அதேப்போல், ஒரு மனிதன் வாழ மனம், உடல் நல ஆரோக்கியம் மிக அவசியமாகிறது.
இதற்குரிய தெய்வமாகியிருப்பவர் சூரியன். இவருக்கு ஞாயிறன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சூரிய ஹோரையில் செந்தாமரை மலர் சாத்தினால் நல்வாழ்வு அமையும் என்கின்றனர்.
கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்று சூரியனின் பெருமையை எதிர்மறையாக இந்த பழமொழி சொல்கிறது.
அதாவது கண் பெற்ற பயனாக சூரியனை வழிபாடு செய்யவேண்டும் என்பது இதன் பொருளாக அமைந்திருக்கிறது.
ஆகையால் நாமும் ஒரு விஷயம் முற்றி போன பிறகு அதற்கான பரிகாரங்களை தேடுவதற்கு பதிலாக ஒரு விஷயம் நடப்பதற்கும் முன் அதற்கான பரிகாரங்களை செய்து நம் வாழ்வில் நலம் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |