சூரியனின் பெயர்ச்சி: அதிர்ஷ்ட காத்து இனி உங்களுக்கு தான்
கிரகங்களின் ராஜவாக சூரியன் திகழ்கிறார். இவர் தொடர்ந்து அவருடைய ராசியை மாற்றி கொண்டு இருப்பார். இது 12 ராசிகளையும் எதோ ஒரு வகையில் கட்டாயம் பாதிக்கும்.
சூரியன் தற்பொழுது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். அவர் ஏப்ரல் 14 தேதி அன்று மேஷ ராசியில் நுழைய உள்ளார். அந்த மாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்றை வழங்க போகிறது. அவை எந்த ராசி என்று பார்ப்போம்.
மகரம்:
இந்த பெயர்ச்சி மகர ராசிக்கு மிக பெரிய நன்மை வழங்கும். இந்த கால கட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் கொடுக்கும். கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு உண்டாகும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு மேஷ ராசியில் சூரியன் சஞ்சாரம் மிகவும் மங்களகரமாக அமைய உள்ளது. இந்த காலத்தில் இவர்களுக்கு வாழ்க்கையில் புதிய தேடுதல் உண்டாகும். மனதில் நேர்மறையான சிந்தனை தோன்றும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு மேஷ ராசியில் சூரியனின் சஞ்சாரம் மனதில் நிம்மதியை கொடுக்கும். பிரிந்த உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் உடல் நிலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். மிகவும் சந்தோஷமான காலமாக அமைய போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |