சூரிய கிரகணம் 2025: அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சூரிய கிரகணம் விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கிரகணத்தின் போது பல மக்கள் அதை நேரில் காண ஆவலோடு இருப்பார்கள். அப்படியாக, 2025 ம் ஆண்டின் முதல் கிரகணம் மார்ச் 13ம் தேதி நடைபெற்றது.
முதல் கிரகணமே சந்திர கிரகணமாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டாவது முறையாக கிரகணம் நிகழ உள்ளது. இது சூரிய கிரகணம் ஆகும். இது மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை நிகழ உள்ளது.
இதை ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆர்டிக் உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய நேரப்படி பகல் 02.20 மணிக்கு துவங்கி, மாலை 04.17 மணிக்கு உச்சம் அடைந்து, மாலை 06.13 மணிக்கு நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த கிரகணத்தை நாம் காணமுடியாது என்றாலும், ஆன்மீக ரீதியாக இது மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதனால ஆன்மீக ரீதியாக இந்த சூரிய கிரகணத்தில் நாம் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
சூரிய கிரகணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை:
1. சூரிய கிரகணத்தின் பொழுது கண்களில் மிகவும் பாதுகாப்பக இருக்கவேண்டும். அதாவது, கிரகணத்தினை நேராக பார்ப்பது மிகவும் ஆபத்தானது. கிரகணம் பார்ப்பதற்கு உபயோகிக்கும் சிறப்பு கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகள் கொண்டே பார்க்கா வேண்டும்.
2. சூரிய கிரகணம் பொழுது நாம் தியானத்தில் ஈடுபடுவது சிறந்த பலன் அளிக்கும். இந்த காலகட்டத்தில் நாம் கடவுளுடைய மந்திரங்கள் சொல்லி உச்சரிப்பது நன்மை தரும்.
3. சூரிய கிரகணத்தின் பொழுது நாம் தேவை அற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை வெயிலில் சுற்றாமல் வீட்டிலே இருப்பது நன்மை தரும்.
4. சூரிய கிரகணத்திற்குப் பிறகு தூய்மையாகக் குளிக்க வேண்டும். கிரகண நேரத்திற்குப் பிறகு குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்வது நன்மை தரும்.
5. கிரகண நேரத்தில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், உணவு சாப்பிட வேண்டும் என்பவர்கள் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
சூரிய கிரகணத்தின் போது தவிர்க்க வேண்டியவை:
சூரிய கிரகணத்தின் பொழுது கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதே போல் கிரகண நேரத்தில் முடிந்த அளவு தூங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தூங்கும் பொழுது நம்முடைய உடல் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |