புதாத்திய யோகம்: மே 7 முதல் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் பெரும் ராசிகள்
ஜோதிடத்தில் நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசன் என்றும் சூரியனின் கிரகங்களின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறார். மே 7 புதன்கிழமை அதிகாலை 4.13 மணிக்கு புதன் மேஷ ராசியில் நுழைகிறார்.
புதன் நுழையும் பொழுது அங்கு மேஷத்தில் இருக்கும் சூரியனுடன் தொடர்பு கொள்ளும். இந்த சூரியனும் புதனும் சேர்ந்தால் புதாத்திய யோகம் உண்டாகும். இதனால் ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கடகம்:
கடகத்திற்கு இந்த புதாத்திய யோகம் 10ஆம் வீட்டில் உருவாகிறது. இதனால் இவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை வழங்கும். இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பொருளாதார சிக்கல் விலகுவதை பார்ப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த புதாத்திய யோகம் உயர் கல்வி மற்றும் வெளிநாடு செல்லும் யோகத்தை வழங்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சிலர் ஆன்மீக பயணம் மற்றும் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்வார்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் பண வரவு திருப்தியை கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த புதாத்திய யோகம் ஏழாம் வீட்டில் இருக்கிறது. அதனால் இவர்களுக்கு மனதில் தெளிந்த சிந்தனையும் சந்தோஷமும் உண்டாகும். திருமண வாழ்க்கையில் நல்ல புரிதல் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். இந்த நேரத்தில் நீங்கள் நினைத்த காரியத்தை சாதிக்கும் தைரியம் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |