பலரும் அறிந்திடாத மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய தெய்விக ரகசியங்கள்
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திகழ்கிறது.அம்மா மீனாட்சியை நினைத்தாலே நமக்கு உண்டான துன்பங்கள் எல்லாம் விலகும்.அப்படியாக பலரும் அறிந்திடாத மீனாட்சி அம்மனை பற்றிய சிறப்பு தகவல்கள் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக பழனியில் முருகன் காலையில் அவர் பக்தர்களுக்கு பல வகையான அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார்.அதாவது காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் என்று அவரை பல்வேறு கோலத்தில் நாம் தரிசனம் செய்து மகிழ்ந்திட முடியும்.
அதோடு மிகவும் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி என மூன்று விதமாய் காட்சி தருகிறாள். அப்படியாக மதுரையில் அம்மா மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.இது பலரும் அறிந்திடாத ஒன்றாகும்.
சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.
பிற சிவ சிவாலயங்களில் முதலில் சிவனுக்கு பூஜை செய்த பின்னரே அம்பாளுக்கு பூஜைகள் நடக்கும்.ஆனால் இங்கு முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். அதே போல் முதலில் பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர்.
அதே போல் மீனாட்சி அம்மன் கோயிலில் பல அதிசயங்கள் உள்ளது.அதாவது மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது வேற எந்த கோயில்களிலும் இல்லாத ஒரு சிறப்பு ஆகும்.
திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி
ப்ராத சந்தியில் – பாலா
6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி
12 – 15 நாழிகை வரையில் – கெளரி
மத்யானத்தில் – சியாமளா
சாயரக்ஷையில் – மாதங்கி
அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி ப
ள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி
தினமும் அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அதாவது அம்பாள் காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.
மேலும் எவர் ஒருவர் ஒரேநாளில் புவனேஷ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசனம் செய்கிறார்களோ அவர்களுக்கு மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்.
ஆக முடிந்தால் நாமும் ஒருமுறை அன்னையின் அனைத்து தரிசனத்தையும் வழிபாடு செய்து வாழ்க்கையில் எல்லா வளமும் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |