சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சிறப்பு தீபாராதனை மற்றும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 9 ஆம் திருவிழாவின் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.
விழாவில் நேற்று மாலை 5.40 மணியளவில் இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் எழுந்தருளினர்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |