நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா?

By Sakthi Raj May 27, 2026 10:40 AM GMT
Report

கனவு என்பது நம்முடைய ஆழ் மனதின் வெளிப்பாடாகவே இருக்கிறது. அப்படியாக, கனவு பெரும்பாலும் அன்றைய நாளில் நாம் நினைத்த மற்றும் சிந்தித்த விஷயங்கள் கனவாக வருவதை காணலாம். சில நேரங்களில் வித்தியாசமான கனவுகள் வருவதையும் நாம் காணலாம்.

அந்த வகையில், நீங்கள் கனவுகளில் அசைவ உணவு சாப்பிடுவது போல் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒருவர் கனவுகளில் அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் அந்த நபர் ரகசியமான ஏதேனும் விஷயங்கள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதாவது, நீண்ட நாள் ஆசையை அவர்கள் நிறைவேற்ற துடிப்பதின் அறிகுறியாக அந்த கனவு இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்லப்படுகிறது. ஒருவர் மீன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் அந்த நபர் வாழ்க்கையில் ஒரு புதிய வருகைக்காக அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதின் அறிகுறியாகும்.

நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா? | Symptoms Of Eating Non Veg In Dreams

2026: கன்னி ராசிக்கு குருபெயர்ச்சியால் ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது?

2026: கன்னி ராசிக்கு குருபெயர்ச்சியால் ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது?

அதாவது அவர்கள் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குவதையும் இந்த கனவு வெளிப்படுத்துகிறது. நீங்கள் கனவில் சிக்கன் சாப்பிடுவது போல் வந்தால் பிறருடைய வாழ்க்கையை ஒப்பிட்டு அவர்களுடைய வாழ்க்கையை போல் நீங்கள் வாழ வேண்டும் என்பதின் ஏக்கத்தை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

மொத்தமாக, ஒருவர் அசைவ உணவுகளை சாப்பிடுவது போல் கனவு கண்டால் அந்த நபர் நீண்ட நாட்கள் ஒரு விஷயம் நடப்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அந்த நபர் ஒரு புதிய வருகையை எதிர்பார்ப்பதாகவும் வாழ்க்கையின் திருப்பங்களும் மாற்றங்களும் நடக்க வேண்டும் என்று ஆசைகளுடன் இருப்பதையும் எடுத்துக்காட்டுவதாக சொல்லப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US