நாளை ஆவணி 1 வீட்டில் என்ன செய்யவேண்டும்
சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்கிறது.இந்த ஆவணி மாதத்திலும் பல சிறப்புக்கள் இருக்கிறது.அப்படியாக நாளை ஆவணி மாதம் ஒன்றாம் நாள் நம் வீட்டில் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
நாம் ஏகாதசி விரதத்தின் மகிமையும் சிறப்புகளையும் கேள்வி பட்டு இருப்போம்.அதற்கு நிகரான விரதம் தான் இந்த விஷ்ணுபதி விரதம். மாதம் தோறும் தேய்பிறை ஏகாதேசி, வளர்பிறை ஏகாதேசி வரும். அதுபோல வருடத்தில் நான்கு நாட்கள் விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும்.
வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. அந்த வகையில் நாளைய தினம் ஆவணி 1 ம் தேதி சனிக்கிழமையோடு சேர்ந்து இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பெருமாளுக்கு உரிய சனிக்கிழமையே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வந்திருப்பதால் இந்த நாளில் பெருமாள் வழிபாடு செய்வது பல மடங்கு பலனை நமக்கு கொடுக்கும். நாளை காலை 10 மணிக்குள் பெருமாள் கோயிலில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்.
27 முறை பெருமாளின் நாமத்தை ஜபித்த படி பெருமாளை கொடிமரத்தோடு சேர்த்து வளம் பெற வேண்டும்.உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி இலைகள், வாசம் நிறைந்த பூக்களையும் தாயாருக்கு மல்லிகைப் பூவும் வாங்கி கொடுக்கலாம்.
இப்படி செய்ய மனதில் இருந்த பாரம் குறைந்தது போல் தோன்றும்.மேலும் பெருமாளை மனதில் நினைத்து இந்த வழிபாடு செய்ய நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து போவதுடன் பெருமாளின் பரிபூர்ண அருளையும் நாம் பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |