தமிழ் புத்தாண்டில் எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1 ஆம் தேதி (ஏப்ரல் 14) பிறக்கிறது. 60 ஆண்டு அடங்கிய பட்டியலில் 47 ஆவதாக வரக்கூடிய விசுவாசுவ(உலகநிறைவு) ஆண்டு பிறக்கவுள்ளது.
சூரிய பகவான் காலசக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைகிறார். ரிஷபத்தில் குரு, கடகத்தில் செவ்வாய், கன்னி ராசியில் கேது, துலாம் ராசியில் சந்திரன், மீன ராசியில் சனி, சுக்கிரன், புதன், ராகு என நான்கு கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. எனவே இந்த கால கட்டத்தில் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து பார்ப்போம்.
ரிஷபம்
கடின உழைப்பிற்கான முழு பலனை பெறுவீர்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். குடும்பத்திலும், சமூகத்திலும் மரியாதை அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்க நிம்மதியான சூழல் உருவாகும்.
மிதுனம்
வேலையை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில், வியாபாரத்திற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இதுவரை உங்கள் தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் உறவில் இனிமையும், இணக்கமான சூழலும் அதிகரிக்கும்.
கன்னி
சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தையும், லாபத்தையும் அதிகரிக்க உதவும். மாணவர்கள் படிப்பு தொடர்பான விஷயத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் வேலை, படிப்பு, குடும்பப் பொறுப்பு என எல்லா விதத்திலும் சரியான வகையில் செயல்பட கவனம் அதிகரிக்கும்.
தனுசு
சில புதிய நபர்களின் தொடர்பு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களை சுற்றியுள்ளவர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் சூழல் சாதகமாக அமையும். சட்டம் தொடர்பான விஷயங்களில் பெரிய வெற்றியை பெறலாம்.
மகரம்
தொழில் தொடர்பாக புதிய உறவுகளை உருவாக்குவதில் கவனம் தேவை. இந்த ஆண்டில் புதிய வருமான ஆதாரங்கள் பெறுவீர்கள். காதலில் உள்ளவர்கள் திருமண வாழ்க்கையில் இணைய வாய்ப்புள்ளது. திருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
கும்பம்
நிதிநிலை முன்னேற்றம் அடையும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணம், குழந்தைப் பேறு என பல சுப காரியங்கள் வீட்டில் நடக்கும்.